தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ராமோஜி ராவ். செருகூரி வெங்கடசுப்பா ராவ் மற்றும் சுப்பம்மா ஆகியோர் இவரின் பெற்றோர். உலகின் மிகப்பெரிய தீம் பார்க் மற்றும் திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவினார். 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி 'ஈநாடு' நாளிதழ் தொடங்கினார். மார்கதர்சி சிட் ஃபண்ட், ஈநாடு செய்தித்தாள், ஈடிவி நெட்வொர்க், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, உஷாகிரண் மூவிஸ், மயூரி ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், டால்பின் குரூப் ஆஃப் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் ராமோஜி ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள். ஒரு தயாரிப்பாளராக, அவர் டோலிவுட்டில் பல மறக்க முடியாத திரைப்படங்களைத் தயாரித்தார். தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தார். இவருடைய படங்கள்…
Read More
பிரபல வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தங்களது ‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனம் தொடங்குவதை அறிவித்துள்ளது!

பிரபல வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தங்களது ‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனம் தொடங்குவதை அறிவித்துள்ளது!

  1974 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக தெலுங்கு சினிமாவில் வளர்ச்சி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் திரைத் துறை சார்ந்த தொழில்துறையில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஒத்துழைத்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பல திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தொழில்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிறுவனம். இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவனம் புதிதாக 'வைஜெயந்தி மியூசிக்' எனும் இசை நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.‌ 50 ஆண்டுகள் நிறைவடையொட்டி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2024 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 'கல்கி 2898 கி.பி.' என்ற பிரம்மாண்ட இலட்சிய படைப்பின் வெளியீட்டிற்கு முன்னதாக அவர்கள் இந்த வைஜெயந்தி மியூசிக் எனும் இசை…
Read More