ஞானச்செருக்கு – நாளை ஆடியோ ரிலீஸ் பங்ஷன்!

நம்ம தமிழ் சினிமா எத்தனையோ விதமாக தன் முகங்களை காட்டிக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் சில தமிழ் சினிமாகள் உலகத் திரைப்பட விழாக்களில் தன் இருப்பை பதிய வைத்து அவார்டை அள்ளி வருவது அரங்கேறிக் கொண்டுதானிருக்குது.

அந்த வகையில் தரணிராசேந்தரன் இயக்கத்தில் ஓவியர் வீர சந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஞானச்செருக்கு’ திரைப்படம் இருபதிற்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, பல விருது களையும் அங்கீகாரங்களையும் பெற்றிக்குது.குறிப்பா லண்டன், நியூயார்க், இங்கிலாந்து, ரஷ்யா, வெனிசுலா என பல நாடுகளில் திரையிடப்பட்டு நெகிழ்ச்சியான விமர்சனங்களையும் கைத்தட்டல் களையும் வென்றுள்ளது ஞானச்செருக்கு.

அதிலும் வெனிசுலாவில் நடைபெற்ற FICOCC உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளியமைப்பு, சிறந்த இசை, சிறந்த ப்ரொடக்சன் டிசைன் என ஐந்து விருதுகளையும், கொல்கத்தாவில் நடந்த Beyond Earth International Film Festival ல் Best Debut Feature Film என்ற விருதையும் பெற்றுள்ளது இத்திரைப்படம். இந்த ஒவ்வொரு திரைப்பட விழாவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் என்பதிலிருந்து இந்த விருதுகள் எம்புட்டு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்துக்கலாம்.

முழுக்க முழுக்க யூத்-கள் என்னும் யங்க்ஸ்டர் டீம் இணைஞ்சி உருவாக்கியதுதான் இந்த ‘ஞானச்செருக்கு’.

பிரபல ஓவியர் வீரசந்தானம் இத்திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு கோப்பி துரைசாமி, படத்தொகுப்பு மகேந்திரன், இசை சக்கரவர்த்தி, பாடல்கள் நெய்தல், காட்சி நிறம் லோகேஷ்வரன், Graphics அரவிந்த் மற்றும் சிறப்பு சப்தம் கண்ணன். இவர்கள் அனைவரும் குறும்படங்கள் மூலம் இணைந்த இளம் கூட்டணி.

குறும்படங்களைத் தொடர்ந்து இப்போது சினிமாவிலும் கால் வைத்துள்ள இவர்கள், முதலில் படத்திற்கான தயாரிப்பாளரை பலகாலமாக தேடியுள்ளனர். ஏமாற்றமும் தாமதமும் மட்டுமே பதிலாக கிடைக்க, க்ரவுட் ஃபண்டிங் எனப்படும் கூட்டுநிதியின் மூலம் படம் தயாரிக்க ட்ரை பண்ணினாங்க. அதிலும் சில சிக்கல்கள் வர, படத்தில் வேலை செய்தவர்களின் மாத சம்பளங்களில் ஒரு பகுதி, நண்பர்கள், உறவினர்களின் பங்களிப்பு என ஒரு தொகை சேர, அதையே முதலீடாக வைத்து நான்கு வருட உழைப்பில் படத்தை எடுத்து முடித்துள்ளனர்.

இப்படியாப்பட்ட அபூர்வ படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை நடக்கப் போகுது.