சோஷியல் மீடியாவால் நன்மையா? தீமையா? அலசும் ‘வேறென்ன வேண்டும்’

ஏ.எம்.ரெட் கார்பேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அருண்மணி, ஷல்ல திம்ம ரெட்டி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேறென்ன வேண்டும்’. சிவபாரதி குமாரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நரேன் ராம் தேஜ் ஹீரோவாக நடிக்க, பிரேர்னா கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். தர்ஷன் சாந்த் வில்லனாக நடிக்க, அனுபமா, சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆதித்யா, கதிர், அஜய், அருண் மிஜோ, ராஜகணபதி, சீமா தன்வீர், நந்தா கிஷோர், சாய் லக்‌ஷ்மி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

கேமில் ஜெ.அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரேம்குமார் சிவபெருமான் இசையமைக்க, பவன் மித்திரா, ஏ.கே.சாந்தகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இடி மின்னல் இளங்கோ ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, பாபா பாஸ்கர், ராதிகா, சந்தோஷ்,  தஸ்தா ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள். சங்கர்.கே படத்தொகுப்பு செய்ய, நிகில் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, இசையமைப்பாளர் ராஹானா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. பாடல்களை பார்த்த இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ் மற்றும் பேரரசு படத்தின் இசையமைப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டியதோடு, பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாக கூறியதோடு, படமும் நிச்சயம் வெற்றி பெறும், என்று வாழ்த்தினார்கள்.

இயக்குநர் சிவபார்வதி குமாரன் படம் பற்றி ,”இன்றைக்கு சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. சமீபத்தில் ஒரு மருத்துவ மாணவியை பேஸ்புக்கில் காதலித்த ஒரு பாதுகாவல் அதிகாரி சுட்டுக் கொன்றிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களை இணைத்தே இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சமூகவலைத்தளங்களின் பின்னணியில் இன்றைய இளைய சமுதாயம் என்ன பலன் அடைந்திருக்கிறது. என்ன தீமை அடைந்திருக்கிறது என்பதை சொல்லுகிற படம்” என்றார்.