இமெயில் விமர்சனம்
சின்ன பட்ஜெட்டில் இயக்குனர் எஸ் எஸ் ராஜன் இயக்கத்தில், ராகிணி திரிவேதி முதன்மை வேடத்தில் நடிக்க, புதிய பட குழுவினர் உருவாக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இமெயில். திரைப்படத்திற்கு முற்றிலும் புதிதான படக்குழு ஒரு படத்தை செய்திருக்கிறது என்பது படம் எடுக்க தெரிகிறது.
ஆன்லைன் விளையாட்டில் ஆபத்துக்களை படத்தில் சொல்ல முடிந்திருக்கிறார்கள் முயன்றிருக்கிறார்கள். ஐடியாவாக கதையாக நன்றாக இருக்கும் திரைப்படம் திரைப்படமாக பார்க்கும் பொழுது கொஞ்சம் அயற்சியை தருகிறது.
ஆன்லைனில் எப்போதும் உலாவிக் கொண்டிருக்கும் நாயகிக்கு “DIE GAME” என்கின்ற விளையாட்டை விளையாட இமெயில் வழியே ஒரு அழைப்பு வருகிறது. அவரும் அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறார். அதில் மூன்று பேரின் புகைப்படம் இருக்கிறது. அவர்களில் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை நாயகி சரியாக கணித்துவிட்டால் அவளுக்கு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என்று விதிமுறைகள் கூற, பணத்தேவையில் இருக்கும் நாயகி அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறாள். அந்த விளையாட்டு விபரீதமாகி நாயகியின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதே “இமெயில்” திரைப்படம்.
இளைஞர்கள் செல்போனை கதி எனக்கு கிடக்கும் இந்தக் காலத்தில், ஆன்லைன் விளையாட்டின் ஆபத்துக்களை பற்றி சொல்ல முயன்றிப்பது நல்ல விஷயம்
படத்தின் திரைக்கதையை உருவாக்கிய மாதிரியே எடுத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கலாம். சின்ன பட்ஜெட் என்பது படத்தின் உருவாக்கத்தை சுருக்கியதோடு, படத்தின் சுவாரஸ்யத்தையும் கெடுக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் வரும் காதல் எபிசோடுகளும், மனோபாலா வரும் எபிசோடுகளும் நம் பொறுமையை அதிகமாக சோதிக்கின்றன. ஹீரோயின் விபரீதமான அந்த விளையாட்டை விளையாடத் துவங்கும் புள்ளியில் இருந்து தான் கதையே துவங்குகிறது.
நடிகர் நடிகைகளுக்கு படம் பற்றிய பயிற்சி தேவை எல்லோர் நடிப்பிலும் ஏதோ ஒரு செயற்கைத் தனம். ஒரு கதாபாத்திரம் கூட உணர்வுபூர்வமாக நடிக்கவில்லை. குறிப்பாக வில்லன் கோஷ்டிகள் சீரியஸாக நடிப்பதற்கு பதிலாக சிரிப்பு வரவைக்கிறார்கள். அதிலும் மினிஸ்டராக காட்டப்படும் லேடி உச்சகட்ட நகைச்சுவை செய்கிறார்.
ராகினி திரிவேதி சண்டைக்காட்சிகளில் மட்டும் கவனம் ஈர்க்கிறார். அவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் மட்டும் தான் படத்தின் ஒரே ஆறுதல்.
நாயகனாக வரும் அசோக் பற்றிய ட்விஸ்ட் கொஞ்சம் பராவியில்லை. படத்தில் அவர் மட்டும் தனித்து தெரிகிறார்.
ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ, லொள்ளு சபா மனோகர், மனோபாலா மற்றும் பலர் படத்தில் இருக்கின்றனர். யாருக்கும் பெரிய அளவு பாத்திரமில்லை.
எம்.செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க, ஜூபின் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் இமெயில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆன்லைன் கேம் ஆபத்துக்களை சொல்ல முயன்றதற்காக பாராட்டலாம்.