11
Feb
இமெயில் விமர்சனம் சின்ன பட்ஜெட்டில் இயக்குனர் எஸ் எஸ் ராஜன் இயக்கத்தில், ராகிணி திரிவேதி முதன்மை வேடத்தில் நடிக்க, புதிய பட குழுவினர் உருவாக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இமெயில். திரைப்படத்திற்கு முற்றிலும் புதிதான படக்குழு ஒரு படத்தை செய்திருக்கிறது என்பது படம் எடுக்க தெரிகிறது. ஆன்லைன் விளையாட்டில் ஆபத்துக்களை படத்தில் சொல்ல முடிந்திருக்கிறார்கள் முயன்றிருக்கிறார்கள். ஐடியாவாக கதையாக நன்றாக இருக்கும் திரைப்படம் திரைப்படமாக பார்க்கும் பொழுது கொஞ்சம் அயற்சியை தருகிறது. ஆன்லைனில் எப்போதும் உலாவிக் கொண்டிருக்கும் நாயகிக்கு “DIE GAME” என்கின்ற விளையாட்டை விளையாட இமெயில் வழியே ஒரு அழைப்பு வருகிறது. அவரும் அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறார். அதில் மூன்று பேரின் புகைப்படம் இருக்கிறது. அவர்களில் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை நாயகி சரியாக கணித்துவிட்டால் அவளுக்கு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என்று விதிமுறைகள் கூற, பணத்தேவையில் இருக்கும் நாயகி அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறாள். அந்த…