25
Nov
ரியோ நடிப்பில் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் வந்திருக்கும் ரொமான்ஸ் வகைப் படம். தமிழில் இப்பொழுது காதல் படங்கள் வருவது குறைந்து விட்டது அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் வந்துள்ள படம் தான் ஜோ. ஜோ எனும் இளைஞனின் வாழ்வில் வரும் காதல் தோல்வியும் வெற்றியும் அது அவன் ஏற்படுத்தும் பாதிப்புகளும் தான் கதை. இரு பெண்கள் வாழ்வில் அவன் என்ன செய்கிறான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே படம் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் ரியோ இதே கல்லூரியில் வந்து சேர்கிறார் கேரளாவை சேர்ந்த நாயகி மாளவிகா இருவரும் ஒரே வகுப்பு என்பதால் நாயகியை பார்த்ததும் நாயகனுக்கு காதல் வர முதலில் காதலை ஏற்க மறுக்கும் நாயகி ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள்.. கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து கேரளாவிற்கு செல்கிறார் நாயகி மாளவிகா ஒரு கட்டத்தில் பெண் கேட்டு செல்கிறார் நாயகன் ரியோ அங்கு…