‘கண்ணப்பா’ படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் பிரபாஸ் !

 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படத்தின் துவக்க விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது.

இதற்கிடையே, ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் பிரபாஸ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. ஆனால், இது குறித்து பிரபாஸ் தரப்பில் இருந்தோ, விஷ்ணு மஞ்சு தரப்பில் இருந்தோ எந்த வித விளக்கமும் அளிக்காமல் இருந்தனர்.

Bhakta Kannappa | Manchu Vishnu as hero Bhakta Kannappa

இந்த நிலையில், நீண்ட நாட்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த இந்த தகவல் குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் பிரபாஸ் நடிப்பது உண்மை தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமான வேடம் ஒன்றி பிரபாஸ் நடிப்பதாக தெரிவித்துள்ள விஷ்ணு மஞ்சு, அவரது கதாபாத்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.