23
Sep
நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில், மங்கி கிரியேடிவ் லேப் தயாரிப்பில் வெளி வந்துள்ள படம் ஆர் யூ ஒகே பேபி. சொல்லாததும் உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் கிடைத்த கதைகளில் தொடர்ச்சியாக படங்கள் இயக்கி வருகிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பல குப்பை படங்களுக்கு மத்தியில் உண்மையில் இவர் படங்கள் வாழ்வின் உண்மைகளை வலிகளை பேசுகிறது. அந்த வகையில் பெரிய பாராட்டுக்கள் இந்தப்படத்தின் கதை திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் விங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வறுமை காரணமாக இந்த குழந்தையை, கேரளாவில் வாழும் குழந்தை இல்லாத பணக்கார கணவன் -மனைவிக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார்கள் லிவிங் டு கெதர் தம்பதிகள். ஒரு வருடம் கழித்து தத்துக்கொடுத்த தாய் காதலன் விட்டுப்போக நினைக்கை தன் குழந்தை மீண்டும் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போக, பல்வேறு…