GRAN TURISMO
கார் ரேஸ் பற்றி வெளிவந்திருக்கும் திரைப்படம்.
க்ராண்ட் டுரிஸ்மோ என்பது ஒரு கார் ரேஸ் கேம். இந்த ஆன்லைன் கேமில் விளையாடுபவர்களை ஃபுரபஷனல்கள் விளையாடும் ஃபார்முலா ரேஸில் விளையாட வைத்தால் என்னாகும்? இது தான் கதை. ஆனால் இது உண்மையில் நடந்த கதை என்பதுதான் சுவாரஸ்யமே.
ரேஸ் விளையாட்டாளர் (ஆர்ச்சி மேடெக்வே), தோல்வியுற்ற முன்னாள் ரேஸ்-கார் டிரைவர் (டேவிட் ஹார்பர்) மற்றும் ஒரு சிறந்த மோட்டார்ஸ்போர்ட் நிர்வாகி (ஆர்லாண்டோ ப்ளூம்), உலகின் மிகபெரும் கார் ரேஸ் விளையாட்டுக்கு அணிசேர்கின்றனர்! ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி தான் வித்தியாசமானது.
கார் கேம் விளையாடுபவர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கு டெஸ்ட் வைத்து, அவர்களிம் நம்பர் 1 வருபவரை ஃபார்முலா 1 க்கு கூட்டிச் சொல்கிறார்கள்.
கதையின் சுவாரஸ்யம் படம் முழுக்க ஒட்டிக்கொண்டது தான் படத்தின் பலம். நடிகர்களின் நடிப்பு, படத்தின் மேக்கிங், எல்லாமெ மிக கச்சிதமாக இருக்கிறது. திரைக்கதை அமைத்த விதம் அட்டகாசம். படத்தில் எந்த இடத்திலும் தொய்வே இல்லாமல் நகர்கிறது.
இசை ஒளிப்பதிவு படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. எடிட்டிங் தான் படத்தின் பெரும் பலம். ரோலர் கோஸ்டர் ரைடர் போல அட்டகாசமாக செல்கிறது படம்.
ஆக்சன் பட விரும்பிகள் மிஸ் பண்ண்க்கூடாத படம்.