‘பில்லா பாண்டி’ பட சிங்கிள் டிராக்கை அஜித் பிறந்த நாளில் வெளியிடுகிறார் யுவன்!

வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் முதன்முறையாக ‘பில்லா பாண்டி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கே.சி.பிரபாத் தயாரிக்கும் இப் படத்தில் சுரேஷ் ஒரு அஜித் ரசிகராக தோன்றவுள்ளாராம்.

 இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது, அஜித் பிறந்த நாளான மே 1-இல் அஜித்தின் புகழ் பாடும் விதமாக ‘எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்’ என்ற பாடல் ரலீஸ் செய்யப்படுகிறது.

அஜித்தின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா சிங்கிள் சிங்கிள் டிராக்கை வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் படத்தில்,  நடிகை சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி, மாஸ்டர் தர்மேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், படத்தின் தயாரிப்பாளரான கே.சி.பிரபாத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘பில்லா பாண்டி’ படத்துக்கு ஒளிப்பதிவு – ஜீவன், எடிட்டிங் – ராஜா முகமது, இசை – இளையவன், இயக்கம் – ராஜ் சேதுபதி. இந்த சிங்கிள் டிராக் பாடல் தல அஜித் ரசிகர்களை கவரும் விதமாகவும், ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்திலும் இப் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.