“ஆலன்” படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் வெற்றி!

“ஆலன்” படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் வெற்றி!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வெற்றி. வித்தியாசமான படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும், நடிகர் வெற்றியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் “ஆலன்” திரைப்படக்குழுவினர். திரையுலகில் அறிமுகமான எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி. வித்தியாசமான களங்களில் ரசனை மிகு படங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி.தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவான ஆலன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை சர்ப்ரைஸாக, மொத்தப்படக்குழுவினரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அவரை மகிழ்வித்துள்ளனர். ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை…
Read More
பம்பர் லாட்டரி பரிசு அடித்ததா ?

பம்பர் லாட்டரி பரிசு அடித்ததா ?

பம்பர் திரை விமர்சனம் இயக்கம் - செல்வகுமார் நடிப்பு - வெற்றி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி. ஊதாரி, ஒன்றுக்கும் ஆகாதவன் திருடன் என தூற்றப்படும் ஒருவனுக்கு பம்பர் லாட்டரி அடிக்கிறது. தான் கஷ்டத்தில் இருந்தாலும் அதை அவனை தேடி வந்து தருகிறான் நேர்மை மாறா கிழவன். பணம் வருகிறது என்றவுடம் அவனைச் சுற்றி இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் பணம் மனித மனங்களில் என்னவெல்லாம் செய்கிறது என்பதே இந்தப்படம். தொடர்ந்து திரில்லர் படங்களாக நடித்து நம்மை சோதித்த நாயகன் வெற்றி உண்மையில் நல்ல கதையில் எல்லோரும் தயங்கும் கதாப்பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு அசத்தியிருக்கிறார். அவருக்கு இது பேர் சொல்லும் வெற்றிப்படம். ஒரு சிம்பிளான வாழ்க்கை கதை அதற்கு தகுந்த பரபர திரைக்கதை என்ன நடக்கும் என்பது தெரிந்தே இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் ஈர்த்து விட்டார்கள். அங்கங்கே பட்ஜெட்டும் நடிகர்களின் ஓவர் நடிப்பும் கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் ஒரு…
Read More
கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பம்பர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பம்பர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பம்பர்'. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் செல்வகுமார் பேசியதாவது. இந்த இடத்திற்கு நான் வந்ததற்குக் காரணமான பலர் இங்குள்ளனர் அவர்கள் அனைவருக்கும் நன்றி, என்னை நம்பி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் தியாகராஜா அண்ணனுக்கு நன்றி. படம் நன்றாக…
Read More
மெமரீஸ் மெமரியில் நிற்கிறதா?

மெமரீஸ் மெமரியில் நிற்கிறதா?

இயக்குநர்கள் - ஷியாம் மற்றும் ப்ரவீன் நடிகர்கள் - வெற்றி, பார்வதி அருண், ரமேஷ் திலக் கதை - மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் நாயகன் தனக்கு தெரிந்த ஒரு நபருக்கு நடந்த கதையாக ஒரு கொலை விசாரணையை கூறுகிறான். ஒருவனின் மெமரியை அறிவியல் மூலம் அழித்துவிட்டு தப்பிக்கும் கொலையாளியை பிடித்த கதையை கூறுகிறான் ஆனால் உண்மையான கதை வேறு மாதிரியாக இருக்கிறது.   8 தோட்டாக்கள், ஜீவி, என திரில்லர் படங்களில் அசத்தும் நாயகன் வெற்றி நடிப்பில் வெளிவந்துள்ள படம். “மெமரீஸ்” படமும் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் தான் உருவாகியுள்ளது. ஷ்யாம் மற்றும் பிரவீன் என்ற மலையாள இரட்டை இயக்குநர் இயக்கியுள்ளார். வெற்றியை நம்பி போனால் குழப்பம் தான் மிச்சமாகிறது. ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன்…
Read More
“மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !

“மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !

  Shiju Thameen’s  Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மெமரீஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஷிஜு தமீன்ஸ் பேசியதாவது… இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் "மெமரீஸ்". இது எனது முதல் படம். எங்கள் படம்…
Read More
பிக்பாஸ் ஷிவானி யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா ?

பிக்பாஸ் ஷிவானி யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா ?

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் 'பம்பர்' படத்தில் நடிகர் வெற்றிக்குஜோடியாக பிக்பாஸ் ஷிவானி  ஒப்பந்தமாகியுள்ளார் கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும்‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும்‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்சிகள்தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஷிவானி நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார். படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார்,…
Read More
ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை!

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை!

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே..தீங்கிரை. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக மிகுந்த பொருட் செலவில் படமாக இருக்கிறது. பிரகாஷ் நிக்கி இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக என்.கே. ராகுல். மணிகுமரன் சங்கரா…
Read More