இயக்கம் – ஶ்ரீனிவாச ராவ்
நடிப்பு – சந்தானம், ப்ரீதி வர்மா, எம் எஸ் பாஸ்கர்
கதை – திக்குவாயால் வாழ்வில் பல வகிகளை அனுபவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்வில் விதி ஒரு விளையாட்டுவிளையாடுகிறது. அந்த விளையாட்டால் அவன் அனுபவிக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து அவன்வெளிவருவதும் தான் கதை.
விதி ஒரு பாத்திரமாக கதைக்குள் வருவதும், வழக்கமாக கவுண்டர் காமெடி அடிக்கும் சந்தானம் இதில்திக்குவாயாக நடித்திருப்பதும் தான் வித்தியாசம். மற்றபடி அதே காமெடி ஃபார்முலா படம் தான். கூடவேமாற்றுத்திறனாளிகளால் எதுவும் முடியும் என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.
வழக்கமாக சந்தானம், உடல் குறைபாடுகளை காமெடி என்கிற பெயரில், கேவலாமான வசனங்களால்அர்ச்சிப்பார். இதில் அவரே திக்கு வாய் பாத்திரம்.
விதி தான் இந்தப்படத்தின் கதையை மாற்றப்போகிறது என முதலில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தின் திரைக்கதை முதல் பாதிக்கும் விதி உள்ளே வந்த பின்னால் நடக்கும் இரண்டாம் பகுதிக்கும்எந்த ஒரு புதிய வித்தியாசமும் தெரிவதில்லை. விதி புதிதாக எதுவும் கதையில் செய்யவில்லை.
முதல் அரைமணி நேரம் படத்திற்குள்ளாக நம்மால் ஒன்றமுடியவில்லை. படம் எதைப்பற்றியது என்கிற தெளிவுகாட்சிகளில் வெளிவரவில்லை.
திக்குவாயாக அப்பாவி சந்தானம், கவுண்டர் காமெடி அடிக்க முடியாமல் திணறினாலும், காதல் மயக்கத்தில்திரிவதும், அப்பா எம் எஸ் பாஸ்கரிடம் சேட்டை செய்யும் இடங்களிலும் கலக்குகிறார். எம் எஸ் பாஸ்கர் மொத்தபடத்தின் நகைசச்சுவைக்கும் தானே பொறுப்பெடுத்து கொண்டு பின்னியெடுத்திருக்கிறார். அப்பாவாக அவர்உடல்மொழியும், சந்தானத்துடன் மல்லுகட்டும் இடங்களில் தியேட்டரில் சிரிப்பு மழை. எதுத்த வீட்டு வரும்நாயகி, புகழ் எல்லலோரும் ஊறுகாயக வந்து போகிறார்கள். படத்தில் ஜொலிப்பது சந்தானமும் எம் எஸ்பாஸ்கரும் மட்டுமே.
படத்திம் கண்டினியுட்டி லாஜிக் என எதுவும் கிடையாது. அவர்கள் நினைத்தது தான் காட்சி. ஒருகாட்சிக்குள்ளாகவே ஷாட் கண்டினியூட்டி இல்லாமல் சொதப்பலான மேக்கிங் படம் முழுதும் இருக்கிறது. வில்லனாக ஷயாஜி ஷிண்டே படத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
காதலியின் அம்மாவை டிக்கியில் உதைக்கும் காமெடி, அப்பாவின் வாயில் யூரின் போவது போலான நாரசங்கள் அவசியம் தானா?
இசை படத்திற்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. ஒளிப்பதிவு ஊரை வைட் ஆங்களில் காட்டும்போதும்பாடல்களின் போதும் மட்டும் கவர்கிறது. படத்தில் அங்கங்கே வரும் வெடிச்சிரிப்புக்காக மொத்த படத்தையும்பார்க்க முடியுமா ?
உங்களுக்கு சந்தானத்தையும் அவரது காமெடியையும் பிடிக்கும் என்றால் நீங்கள் மட்டும் பார்க்கலாம்.