கவிஞர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

0
295

நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் அவர் பேசுகிற அவரது நகைச்சுவையான வரிகளை ஒத்திருக்கிறார். இவையே அவரது வெற்றியின் முக்கிய கூறுகளாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்போது, ​​அவர் தனது ஆர்வத்தால் ஒரு பாடலாசிரியராக மாறி, நடிகராக உருவாக்கிய அதே தாக்கத்தை கொடுத்திருக்கிறார்.

பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

ஆம்.. லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் தான் இந்த இளம், அழகான மற்றும் எழுச்சியூட்டும் ஐகான் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளர். அவர் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ பாடலுக்கு அனிருத்தின் இசை அழகியலை கொடுத்து இருக்கிறது. சிவகார்த்திகேயன், அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் பங்கு பெற்ற வீடியோ வடிவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் அதன் எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியது.

விவேக் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் குரலில் வெளியான முதல் தனிப்பாடலான ‘எதுவரையோ’ ஏற்கனவே YouTubeல் மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது வானொலி நிலையங்களின் கீதமாகவும், எல்லோருடைய பிளேலிஸ்ட்களிலும் முக்கிய இடத்தை பிடித்த பாடலாக இருப்பதும் குறிப்பிடத்தகுந்த அம்சம்.

அத்துடன் சிவகார்த்திகேயன் ஏற்கனவே அனிருத் இசையமைப்பில் பின்னணி பாடகராக தன்னை நிரூபித்த நிலையில், ‘கல்யாண வயசு’ பாடலில் சிவகார்த்திகேயன்-அனிருத் இணை புதிய பரிமாணத்தை நிரூபித்து, இசை அட்டவணையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்த பாடலை, வெற்றிப் பாடல் என்று அறிவிக்க வேறு என்ன சிறப்பு வேண்டும்?