மாபெரும் இதிகாசங்களில் ஒன்று ராமாயணம், அந்த கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் “ஆதிபுருஷ்”.
இதை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார், இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 16ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.
“ஆதிபுருஷ்” படத்தின் டிரைலர் வெளிவந்த போது அனைத்து மொழிகளையும் சேர்த்தி 6 கோடிக்கு மேல் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படம் திரையரங்குகளில் வெளிவரும் போது ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள படக்குழு “அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமான அனுமனுக்கு மிகுந்த மரியாதை உடன் கூடிய பணிவான அஞ்சலி”.இப்படத்தை ஒரு காலி இருக்கையுடன் திரையிடப்படும், இதற்கு காரணம் அனுமனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இதை செய்வதாக தெரிவித்துள்ளனர்.