‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் இந்த இடத்திலா நடந்தது!

‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் இந்த இடத்திலா நடந்தது!

  நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. 'ஆதி புருஷ்'…
Read More
ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் “ஆதிபுருஷ்” படக்குழு அறிவிப்பு

ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் “ஆதிபுருஷ்” படக்குழு அறிவிப்பு

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று ராமாயணம், அந்த கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் "ஆதிபுருஷ்". இதை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார், இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 16ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. "ஆதிபுருஷ்" படத்தின் டிரைலர் வெளிவந்த போது அனைத்து மொழிகளையும் சேர்த்தி 6 கோடிக்கு மேல் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளிவரும் போது ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள படக்குழு "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமான அனுமனுக்கு மிகுந்த மரியாதை உடன் கூடிய பணிவான அஞ்சலி".இப்படத்தை ஒரு காலி இருக்கையுடன்…
Read More
ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

  ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம், மீண்டும் புதிய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும். திரைத்துறை சேனல்கள், இசை சேனல்கள் , ஏனைய பொழுதுபோக்கு சேனல்கள்.. இதைத் தவிர்த்து இந்தியா முழுவதும் எழுபதிற்கும் மேற்பட்ட முன்னணி பண்பலை வானொலி நிலையங்கள், தேசிய செய்தி சேனல்கள், திறந்த வெளி விளம்பர பலகைகள், இசையை ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் தளங்கள், டிக்கெட் பார்ட்னர்கள், திரையரங்குகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்து முக்கிய…
Read More