“மாமன்னன்” படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

“மாமன்னன்” படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

  ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More
சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும்

சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும்

ஏப்ரல், 11, 2023 தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாண்புமிகு முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஒரு செய்தியை நேற்று சட்டசபையில் வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.M.P. சாமிநாதன் அவர்களுக்கும் முதலில் எங்களின் மனமார்ந்த நன்றி. தமிழக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை 2020-21-ம் ஆண்டுகளுக்கு பிறகு, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. 2022-ல் 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி மேலும் தொடர்ந்து தமிழ் சினிமா துறை ரூபாய் 5,000 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் துறையாக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தைகைய வளர்ச்சியை எட்ட முட்டுக்கட்டையாக இருப்பது, தமிழ் நாட்டில் ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே.…
Read More
அமைச்சர் உதயநிதி,  இயக்குனர் விக்னேஷ் சிவன் பங்குபெற்ற  Drive Against Drugs ஆவணப்பட போட்டி

அமைச்சர் உதயநிதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் பங்குபெற்ற Drive Against Drugs ஆவணப்பட போட்டி

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் "Drive Against Drugs" போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !! இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் திரு பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ்…
Read More
நிவேதா பெத்துராஜ் பெருமை!

நிவேதா பெத்துராஜ் பெருமை!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன் ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர். இந்நிலையில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், இரண்டாவது படத்திலேயே மெகா கூட்டணியுடன் கிராமத்து ரோலில் களமிறங்குகிறார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நிவேதா பெத்துராஜ், “இது…
Read More