துணிவு, வாரிசு படத்தின் டிக்கெட் விலையை கேட்டு ரசிகர்கள் பேரதிர்ச்சி

 

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இருக்கும் துணிவு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது. இவ்விரு படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதனால் போட்டிப்போட்டுக் கொண்டு டிக்கெட்டை வாங்கி வருகின்றனர்.

துணிவு படத்தை போனி கபூர் தயாரித்து, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரித்து, 7 ஸ்க்ரீன் லலித் வெளியிடுகிறார். இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு படத்தின் FDFS டிக்கெட் விலையெல்லாம் கேட்டால் தலைசுற்றிவிடும் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அதிகபட்சமாக முதல் ஷோ டிக்கெட் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் இதை வாங்கவும் கூட்டம் இன்னமும் அலைமோதுகின்றது.