துணிவு படத்தில் அஜித்துடன் நடித்தவர் தயாரித்து இயக்கும் பழங்குடி மக்களின் வாழ்வியல் படம்!

துணிவு படத்தில் அஜித்துடன் நடித்தவர் தயாரித்து இயக்கும் பழங்குடி மக்களின் வாழ்வியல் படம்!

  தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவருமான ஆதர்ஷ் மதிகாந்தம், 'நாயாடி' என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனமான நாயாடிகளின் (வேட்டைக்காரர்கள் என்று பொருள்) கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லரான இதில் அஜித்துடன் 'துணிவு' திரைப்படத்தில் நடித்த காதம்பரி நாயகியாக நடிக்கிறார். பிரபல யூடியூபரான ஃபேபி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது குறித்து பேசிய ஆதர்ஷ் மதிகாந்தம், "திரைப்படத் துறையில் பங்காற்ற வேண்டும் வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனவே, ஆஸ்திரேலியாவில் நான் ஈட்டிய பணத்தைக் கொண்டு 'நாயாடி' திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். திகில் திரைப்படங்களுக்கு என உள்ள வடிவத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் இப்படம்…
Read More
‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். இதன் பிறகு அவர் பேசுகையில், '' முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு…
Read More
சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

நடிகர் சிவகுமார் வழங்கும் ' திருக்குறள் 100' திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில் 'திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர் , பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார். 'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு' என்ற குறளில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழியில் இறங்கி…
Read More
துணிவு, வாரிசு படத்தின் டிக்கெட் விலையை கேட்டு ரசிகர்கள் பேரதிர்ச்சி

துணிவு, வாரிசு படத்தின் டிக்கெட் விலையை கேட்டு ரசிகர்கள் பேரதிர்ச்சி

  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இருக்கும் துணிவு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது. இவ்விரு படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதனால் போட்டிப்போட்டுக் கொண்டு டிக்கெட்டை வாங்கி வருகின்றனர். துணிவு படத்தை போனி கபூர் தயாரித்து, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரித்து, 7 ஸ்க்ரீன் லலித் வெளியிடுகிறார். இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு படத்தின் FDFS டிக்கெட் விலையெல்லாம் கேட்டால் தலைசுற்றிவிடும் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அதிகபட்சமாக முதல் ஷோ டிக்கெட் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் இதை வாங்கவும் கூட்டம் இன்னமும் அலைமோதுகின்றது.    
Read More