பட தயாரிப்பிற்கு முன்னதாக பாடலை வெளியிட்ட Revgen Film Factory தயாரிப்பு நிறுவனம் !!!

 

தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் தயாரிப்பு நிறுவனமான Revgen Film Factory நிறுவனம் படத்தை எடுப்பதற்கு முன்னோட்டமாக படததின் ஒரு பாடலை ஆல்பம் பாடலாக தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்பாடலை Trend Music இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

“உன் கூடவே” ஆல்பம் பாடல் வெளியீடு

Revgen Film Factory வழங்கும் இயக்குநர் கோகுல் பிரபு இயக்கத்தில், M S ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் புதுமுகங்கள் நடிப்பில் காதல் கீதமாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “உன் கூடவே”. இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலின் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்பாடலை Trend Music இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் கோகுல் ராம் பேசியதாவது…
படம் செய்யலாம் என்று இருந்த போது, தயாரிப்பாளர் தான் முதலில் நாம் ஒரு பாடல் செய்யலாம் என்றார். ஜோன்ஸை அறிமுகப்படுத்தினார். அவரது குரலை கேட்டவுடன் அவரையே பிக்ஸ் பண்ணிவிட்டோம். மோகன்ராஜ் அழகான வரிகள் தந்தார். விஜி மாஸ்டர் எங்களுக்காக வந்து இந்தப்பாடலின் நடனத்தை அமைத்து தந்தார். சிந்தூரி இந்த பாடல் எடுக்கும் நேரத்தில் சின்ன ஆக்ஸிடெண்ட் ஆனால் அதை பொருட்படுத்தாமல் மருந்து எடுத்து கொண்டு சூட்டிங்கில் கலந்துகொண்டார். மிக நன்றாக செய்துள்ளார். பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்பாடல்

தயாரிப்பாளர் தேவகுமார் பேசியதாவது…
கார்பரேட் துறையிலிருந்து வந்து இங்கு விழாவில் கலந்துகொள்வது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. உண்மையில் இந்த பாடல் நடக்க இயக்குநர் தான். உதயகுமார் சாருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அவரைப்போல எனக்கும் எஸ்பிபி பிடிக்கும். பட்டாசு மாதிரியான இயக்குநர் பேரரசு வந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் உழைப்பை உண்மையாக தந்தால் கண்டிப்பாக அதில் ஜெயிக்கலாம். நடிகர் லெனின் உண்மையாக உழைக்கிறார். அவருக்கும் நடிகை சிந்தூரிக்கும் என் வாழ்த்துக்கள். ஜோன்ஸ் ரூபர்ட் மிகச்சிறப்பான பாடலை தந்துள்ளார். இந்த டீம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்.

நடன இயக்குநர் விஜிசதீஷ் பேசியதாவது..
முதலில் வேறொரு நடன இயக்குநர் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் என்னை அழைத்தார்கள். லெனினை பார்த்த போது ஆடியிருக்கிறீர்களா என்று கேட்டேன் இல்லை என்றார். அவரைத்தான் ஆட வைக்க வேண்டும் என சவாலாக எடுத்து கொண்டு இந்தப்பாடலை எடுத்தோம். இப்பாடலில் நடனம் கற்றுக்கொண்டு மிக அட்டகாசமாக ஆடினர். எல்லோரும் மிக அற்புதமாக ஒத்துழைத்தார்கள். இயக்குநர் என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தார். கிராமத்து லுக்கில் அழகான பாடலை எடுத்துள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள்.

இசையமைப்பாளர் M S ஜோன்ஸ் ரூபர்ட் பேசியதாவது..
என் தாய் தந்தை குருவிற்கு நன்றி. இந்தக்குழு இப்பாடலில் எனக்கு மிகப்பெரும் ஒத்துழைப்பை தந்தார்கள். ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது. தீப்தி சுரேஷ் இந்தப்பாடலில் ஒரு ஹம்மிங் பண்ணினார் அவருக்கு நன்றி. மோகன்ராஜன் மிகச்சிறப்பான வரிகள் தந்தார். இந்தப்பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நாயகி சிந்தூரி பேசியதாவது..
இது என் முதல் மேடை எல்லோருக்கும் நன்றி. இப்பாடல் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப்பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
தயாரிப்பாளர் தேவகுமார் சினிமா மீது காதல் கொண்டவராக இருக்கிறார். நாயகன்
லெனின் பெயரே நன்றாக உள்ளது. பாடலில் நன்றாக நடித்துள்ளார். படம் ஜெயித்தவுடன் முதல்வர் சீட்டுக்கு ஆசைப்படாதீர்கள். இப்போது அது தான் நடக்கிறது. நாயகி நன்றி மட்டுமே சொன்னார் இந்தகாலத்தில் நன்றியோடு இருப்பது பெரிய விசயம். இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட் சூப்பராக பாடியுள்ளார். இயக்குநர் ஒரு அழகான பாடலை தந்துள்ளார். இன்றைய சினிமாவில் சின்ன படங்களாகவே இருந்தாலும் பெரிய நிறுவனம் வெளியிட்டால் தான் வெற்றி பெறுகிறது. இந்தப்படத்தையும் ரெட் ஜெயண்ட் வாங்குமென நம்புகிறேன் இந்தக்குழு வெற்றிபெற என் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது…
ஒரு பாடல் தானே இந்த விழாவிற்கு வர வேண்டுமா என யோசித்தேன். ஆனால் இங்கு வந்து இந்தப்பாடல் பார்த்தபிறகு மிகப்பெரிய மகிழ்ச்சி. மிக சிறந்த ஒரு பாடலை எடுத்துள்ளார்கள். பாடலில் நாயகனும் நாயகியும் நன்றாக ஆடியுள்ளார்கள் இன்னும் கொஞ்சம் உழைத்தால் திரையுலகில் மிகச்சிறப்பான இடத்தை பிடிப்பார்கள். இந்தக்குழு 4 நிமிட பாடலுக்கு மிககடினமான உழைப்பை தந்துள்ளார்கள். ஒரு விசயத்தை அர்ப்பணிப்போடு செய்யும்போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நடிகர் தயாரிப்பாளர் லெனின் பேசியதாவது…
இங்கு பெரிய பிரபலங்கள் வந்து வாழ்த்துவது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தக்குழு மிகச்சிறப்பான உழைப்பை தந்துள்ளார்கள். என்னை சுற்றி நிறைய நல்லவர்கள் பாசமானவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் அன்புக்கு நன்றி. ஹைஸ்பீட் ஷாட் என்றால் என்னவென்றே தெரியாது ஆனால் என்னை வைத்து இந்தப்பாடலின் நடனத்தை ஹைஸ்பீட் ஷாட்டில் எடுத்தார்கள் நடன இயக்குநருக்கு நன்றி. ஜாலியாக இதை எடுக்க வேண்டும் என்று தான் இப்பாடலை எடுத்தோம். இப்போது எல்லோரும் பாராட்டுவது மகிழ்ச்சி. இந்தப்பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள், பார்த்து உங்கள் கருத்துக்களை தாருங்கள் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு நிறுவனம் : Revgen Film Factory
இயக்கம் : கோகுல் ராம்
ஒளிப்பதிவு : சதீஷ் மெய்யப்பன்
நடன அமைப்பு : விஜிசதீஷ்
இசை : M S ஜோன்ஸ் ரூபர்ட்
எடிட்டர் – பவித் ரன் K
கலை இயக்கம் : L கோபி
பாடல் : மோகன்ராஜன்
உடை வடிவமைப்பு : கார்த்திக்
மேக்கப் – ஜெஷாந்தி & ஜாஸ்மின் ஆண்டனி
தயாரிப்பு – லெனின் , தேவகுமார்