திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடும் டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களான கியூப் மற்றும் UFO ஆகியவை தங்களது சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தென் இந்தியாவில் தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியிடுவது முற்றிலும் நிறுத்தப்படும் என்று தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் ஒட்டு மொத்தமாக ஸ்டிரைக் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. இது குறித்து கியூப் நிறுவனத்துடன் தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மார்ச்-1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் உறுதி என்று திரைப்பட அமைப்புகளால் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தப் பிரச்சினையில் தங்களது சார்பிலான விளக்கத்தை கியூப் நிறுவனம் நேற்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அது இதோ: :
திரையரங்க உரிமையாளர்களுக்கு வணக்கம்..!
கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் கூட்டத்தில் எங்களிடம் முன் வைத்த கோரிக்கைகள் :
- VPF கட்டணத்தை முற்றிலும் அகற்ற வேண்டும்.
- திரையரங்கில் 8 நிமிடம் மட்டுமே விளம்பரத்தை திரையிட வேண்டும்.
இது குறித்து திரையரங்கு உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் கூறுமாறு எங்களை கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டுமெனில்,
- திரையரங்கு உரினமயாளர்கள் டிஜிட்டல் சினிமா சிஸ்டத்தை விலை குடுத்து வாங்க முன்வர வேண்டும்.
அல்லது
- திரையரங்கு உரிமையாளர்கள் அதிக வாடகைக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பம் இல்லாமல் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தை நாங்கள் மாற்ற இயலாது. மேலும், அவ்வாறு நாங்கள் ஒருபொழுதும் செய்ய மாட்டோம் என்பது நீங்கள் அறிந்தே.
கடந்த 30 வருடங்களாக இந்திய திரைப்படத் துறையின் தொழில் நுட்ப வளர்ச்சியில் எங்கள் நிறுவனம் பெரும் பங்கு வகித்து வருகிறது. படத் தொகுப்பு முறையிலும் முற்றிலும் கணிணி சார்ந்த ஆவிட் தொழில் நுட்பத்தையும், ஒலி வடிவமைப்பில் டிடிஎஸ் டிஜிட்டல் ஒலியினையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மேலும் எங்களது கியூப் டிஜிட்டல் சினிமா முற்றிலும் இந்தியாவிலேயே அதிலும் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு, உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் விற்பனையாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
QUBE டிஜிட்டல் முறை வருவதற்கு முன்பு திரையரங்கில் பயன்படுத்திய பனழய(Analog) பிலிம் புரொஜெக்டரின் விலை 1.5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் வரைதான் இருந்தது, மேலும் அதன் பராமரிப்பு செலவுவும் மிக குறைவு.
அதுமட்டுமன்றி, Analog பிலிம் புரொஜெக்டரை சராசரியாக 30 ஆண்டுகளுக்கு மேலும் பயன்படுத்த முடியும். இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு குறுகிய காலத்தில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பாளர் ரூபாய் 60,000 முதல் 75,000 வரை பிரிண்ட் செலவு செய்து ஒரு திரைப்படத்தை திரையிட வேண்டியிருந்தது.
டிஜிட்டல் சினிமா அறிமுகப்படுத்திய தருணத்தில் திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கெனவே Analog பிலிம் புரொஜெக்டரில் முதலீடு செய்து இருந்த காரணத்தினாலும், அதிவேகமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வரக் கூடிய மாற்றத்தினாலும் மீண்டும், மீண்டும் பெரிய முதலீட்டினை குறுகிய காலத்தில் செய்ய வேண்டி வருமோ என்ற ஐயத்தினாலும் மேலும், இதன் பயன் தயாரிப்பாளரின் பிரிண்ட் செலவை வெகுவாகக் குறைக்கும் என்பதாலும் தங்கள் பணத்தை முதலீடு செய்ய முன் வரவில்லை.
ஆகையால் எங்களது நிறுவனமும் மற்றும் எங்களை போன்ற UFO Moviez, PXD, E-City, Cinematica, Interworld, Shree Venkatesh Films, United Mediaworks ஆகிய நிறுவனங்களும் இந்தத் துறையில் மிகப் பெரிய முதலீட்டை செய்தது மட்டும் இல்லாமல், திரைத்துறையில் முதலீடு செய்யும் திரையரங்க உரிமையாளர், திரைப்பட தயாரி்ப்பாளர் மற்றும் இத்துறை யைச் சேர்ந்த அனைத்து பங்குதாரர்களும் பயன் பெறக் கூடிய ஒரு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வந்தோம்.
இத்தகைய முதலீட்டின் மூலம்தான் அனைத்து திரையரங்குகளும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறின. இதன் மூலம் குறைந்த செலவில் அதிக திரையரங்குகளில் திரையிட்டு நேரடி பயனை பெற்றவர்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் இ்பபோது சிலர் சரியான புரிதல் இல்லாமல் இதனை பற்றி கூறி வரும் செய்திகள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
தயாரிப்பாளர்களுக்கு Qube மூலம் என்ன பயன்?
டிஜிட்டல் திரையிடல் முறையினால் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் பயன்
- 2005-ல் பிலிம் பிரிண்டிற்கு ரூபாய் 60,000 முதல் 75,000 வரை செலவானது. நாங்கள் திரைப்பட வெளியீட்டுக்கான மிகப் பெரிய பிரிண்ட் செலவினை ரூபாய் 9000 Per Week என்ற அடிப்படையிலும், ரூபாய் 350 Per Show(குறைந்தப்பட்சம் 7 காட்சிகள்) என்ற அடிப்படையிலும் குறைத்துள்ளோம்.
- முறைகேடுகளை தடுக்கும் வண்ணம் அதிக பாதுகாப்பு அம்சத்துடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் பயன்பாட்டிற்கு தந்துள்ளோம்.
- குறைந்த செலவில் அதிக திரையரங்குகளில் திரையிட முடிகிறது. மேலும் சிறிய ஊர்களில் உள்ள திரையரங்குக்குக்கூட முதல் நாள், முதல் காட்சி திரையிடக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது.
- ஒரு படத்தின் முதல் நாள் காட்சியில் பார்க்க் கூடிய அதே தரத்தினை படத்தின் இறுதிக் காட்சிவரை எந்த ஒரு தரமும் குறையால் பார்க்கும் வாய்ப்பினை தந்துள்ளது.
- டிஜிட்டல் சினிமா தொடங்கிய காலக்கட்டத்தில் வருடத்திற்கு 450 படங்கள் மட்டுமே வெளிவந்த நிலை மாறி இப்பொழுது 1800 படங்கள்வரை வெளியிடும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளது.
Small Movie | Large Movie | |||
Cost of Production (crores) | 2.50 | 80.00 | ||
Publicity (crores) | 1.00 | 8.00 | ||
Total Cost (crores) | 3.50 | 88.00 | ||
No. of Release Screens | 60 | 300 | ||
Digital | Digital | |||
Cost per Screen () | ~60,000 | ~10,000 | ~60,000 | ~10,000 |
Total Print Cost (lakhs) | 36 | 6.0 | 180 | 30 |
Print Cost as % of Total | 10.3% | 1.7% | 2.0% | 0.3% |
மேலே குறிப்பிட்டு உள்ளபடி ஒரு திரைப்படத்திற்கு டிஜிட்டல் முறையில் திரையிட ஆகவும் செலவு, ஒரு திரைப்படத்தை உருவாக்க ஆகும் மொத்த செலவில் அதிகப்பட்சம் வெறும் 0.3% முதல் 1.7% மட்டுமே..! இந்த 1.7% செலவு மட்டும்தான் சில திரைத் துறையினரின் கிளர்ச்சிக்கு காரணமா என்பதை எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.
அனைவருக்கும் பயன் தரும் வனகயில் இயங்கிவரும் இந்த திட்டத்தின் அடிப்படை புரிதல் இல்லாத காரணத்தினால்தான் இந்தக் குழப்பங்கள் வருகிறதா எனவும் எங்களுக்குத் தெரியவில்லை.
VPF என்றால் என்ன..? அது எதன் அடிப்படையில் நடைமுறைக்கு வந்தது..?
டிஜிட்டல் முனறயில் திரையிட ஒரு திரையரங்க உரினமயாளர் ரூபாய் 10 லட்சத்தில் இருந்து 50 லட்சம்வரை முதலீடு செய்ய வேண்டும். மற்றும் வருடத்திற்கு 1 லட்சத்தில் இருந்து 3 லட்சம்வரை பராமரிப்பு செலவு செய்ய வேண்டும்.
மேலும் டிஜிட்டல் உபகரணங்களின் ஆயுள் அதிகப்பட்சம் 10 வருடங்கள் என்றாலும், அதிவேகமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வரக் கூடிய மாற்றத்தினால் மீண்டும், மீண்டும் பெரிய முதலீட்டினை குறுகிய காலத்தில் செய்ய வேண்டி வரும் என்பது அனைவரும் அறிந்ததே..!
ஆனால் திரையரங்க உரிமையாளர் செய்யும் இந்த முதலீட்டின் பயனை தயாரிப்பா ளர்கள்தான் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து அனுபவிப்பார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
எனவே டிஜிட்டல் முறையில் நேரடி பயன் பெறும் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் செய்யும் செலவில் நியாயமான சிறிய பங்கினை, தங்கள் தினரப்படங்களை திரையிடும்போது மட்டும் திரையரங்க உரிமையாளர்களுக்கு VPF முறையில் தருகிறார்கள்.
அதுவும் அவர்கள் பழைய முனறயில் பிரிண்ட்டிற்கு செய்த செலவில் ஒரு சிறு விழுக்காடு மட்டுமே. Per show, Per week போன்ற VPF திட்டத்தினால் தயாரிப்பாளர்கள் ஒரு பிரின்டிற்கு செய்யும் செலவு மேலும் குறைந்துள்ளது. இந்த சிறிய VPF தொகையானது அடிப்பனடயில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திரையரங்க உரிமையாளர்களுக்குத்தான் சேர வேண்டும்.
திரையரங்க உரிமையாளர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய இந்த தொகையை எங்களைப் போன்ற நிறுவனங்கள் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அவர்கள் சார்பாக பெற்றுக் கொண்டு அதிலிருந்து கீழே குறிப்பிட்டுள்ளபடி தயாரிப்பாளர்களுக்கு தாங்கள் செய்யும் சேவைக்கு ஆகும் செலவைத் தவிர, ஒரு சிறு பகுதியை டிஜிட்டல் தொழில் நுட்பக் கருவிகளுக்கும் அதைச் சார்ந்த அனைத்து பராமரிப்பு செலவுகளுக்கும், ஏனைய சேவைகளுக்கும் செய்து வருகிறோம்.
VPF திட்டம் இத்துறையைச் சேர்ந்த அனைத்து பங்குதாரர்களுக்கும் பயன் தரும்படி செயல்பட்டு வருகிறது. 2K, 4K மற்றும் laser போன்ற உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்திற்கு அனைவரும் முதலீடு செய்ய உதவும். மற்றும் இத்துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொண்டால் இத்துறை மேலும், மேலும் வளரும் என்பதில் ஐயமே இல்லை.
QUBE தயாரிப்பாளர்களுக்கு தரும் சலுகைகள் :
- தயாரிப்பாளர்களின் தினரப்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்ற தேவையான தொழில் நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறோம். மற்றும் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களை டிஜிட்டல் முனறயில் (DCP Mastering) இலவசமாக மாற்றி தருகிறோம்.
- திரைப்படங்கள் (DCP Hard disk), KDM ஆகியவற்றை திரையரங்குகளுக்கு இலவசமாக கொண்டு சேர்க்கிறோம்.
இந்த சேவைகளை செய்து வரும் மற்ற நிறுவனங்களுக்கும் Qubeக்கும் ஒரு சிறிய ஒப்பீடு
Services offered | Digital Cinema Companies | Qube | |
USD | INR | ||
Mastering- 2K | $5,000 | ₹ 3,25,000 | ₹ 0 |
QC Show | $1,125 | ₹ 73,125 | ₹ 0 |
Subtitle/Versions | $2,000 | ₹ 1,30,000 | ₹ 25,000 |
Overtime/Weekends | $1,250 | ₹ 81,250 | ₹ 0 |
Drive Logistics | $150 | ₹ 9,750 | ₹ 0 |
KDM | $30 | ₹ 1,950 | ₹ 0 |
VPF-Max | $850 | ₹ 55,250 | ₹ 25,000 |
VPF-Min | $150 | ₹ 9,750 | ₹ 2,275 |
மேலே குறிப்பிட்டுள்ளது போல் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் நிறுவனம் அவர்களுக்கு பெரும் சலுகைகள் செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவில் ஒரு திரைப்படத்தினை Mastering செய்து திரையிட VPF இல்லாமல் குறைந்தப்பட்சம் ஒரு திரைப்படத்திற்கு ரூபாய் 3 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
உலகத்திலேயே மிகவும் குறைந்த தொகையை எங்கள் நிறுவனம் தயாரிப்பாளர்களிடம் வாங்கி வந்தாலும், பெரிய படத்திற்கான VPF கட்டணத்னத இன்றைய குறைந்த விலையிலேயே வைத்து, சிறிய படங்களின் தயாரிப்பாளர் சுமையை மேலும் குறைக்க எண்ணி நாங்கள் அளித்த சலுகையினை JAC கூட்டத்தில் ஏற்கவில்லை.
டிஜிட்டல் வரும் முன்பேயே திரையரங்குகளில் காட்டப்படும் விளம்பரங்களின் உரிமை மற்றும் அதன் மூலம் வரும் வருமானம் அந்தந்த திரையரங்க உரிமையாளர்களையே சேரும். 1950-ம் ஆண்டு முதல் இதுதான் நடைமுறை. இதனால் விளம்பர நேரத்தைக் குறைப்பது திரையரங்க உரிமையாளர்களின் வருமானத்தைக் குறைத்து அவர்கள் செய்த முதலீட்டை திரும்பப் பெறும் நாட்களையும் அதிகரிக்கும்.
நாங்கள் இதுவரை செயல்படுத்தி வந்த திட்டத்தின் மூலம் திரையரங்க உரிமையாளர்களின் முதலீட்டு சுமையைக் குனறப்பது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களின் Print செலவினையும் குறைத்துள்ளோம்.
அது மட்டுமில்லாமல் Mastering கட்டணத்தை இலவசமாக செய்து வருவதினால் திரைத்துறையில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் பயன் பெற்று வருகின்றனர்.
இத்தகைய விளம்பரத்துடன் கூடிய VPF திட்டமும் இல்லையெனில், மற்ற நாடுகளை போல அதிகமான VPF கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இதன் மூலம் டிஜிட்டல் புரொஜெக்சன் சேவை செய்யும் எங்களைப் பற்றி வரும் தவறான குழப்பங்கள் நீங்கி சரியான புரிதல் வரும் என நம்புகிறோம். இதுநாள்வரை நீங்கள் தந்து வந்த ஆதரவிற்கு நன்றி. இது மேலும் தொடர விரும்புகிறோம்.
நன்றி
குறிப்பு :
இது ஆங்கில கடிதத்தின் சிறிய தமிழ் குறிப்பு மட்டுமே. முழு விபரங்களுக்கு ஆங்கில பதிப்பினை பார்க்கவும்.