இயக்கம் – லிஜு கிருஷ்ணா
நடிப்பு – நிவின் பாலி, அதிதி பாலன்
இசை – கோவிந்த் வசந்தா
கதை – காலம் காலமாக எளிய மக்களின் நிலம் பறிக்கப்படுவதும் அதற்கெதிராக அவர்கள் பொங்க ஆரம்பிப்பதுமே கதை.
நிவின் பாலி ஒரு அத்தலெட் அவருக்கு ஒரு ஆக்ஸிடெண்டில் கால் அடிபட எதுவும் செய்ய முடியாமல் வீட்டில் முடங்குகிறார். மலை கிராமத்தில் அவருக்கு வீட்டை சுற்றிய இடம் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதற்கெதிராக அவர் என்ன செய்கிறார் கிரம மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுமையாக சொல்லியிருக்கிறார்கள்.
மலையாள படங்களுக்கு என இருக்கும் வழமையான திரைக்கதை மிக மெதுவாக நகரும் காட்சிகள், மனிதர்களின் இயல்பான வாழ்க்கை அதனூடே சொல்லப்படும் பிரச்சனை என கொஞ்சம் 80 களின் படங்களின் ஞாபகத்தை தூண்டுகிறது.
படத்தில் அதிகம் தெரிந்த நடிகர்கள் நிவின் பாலி அதிதி பாலன். அதிதி பாலனுக்கு அதிகம் வேலையில்லை. வந்து போகிறார் அவ்வளவே. நிவின்பாலி மொத்த படமும் அவர் மேல் தான் பயணிக்கிறது.
இயலாமை வலிவிழந்த உடல் கோபம் அனைத்தையும் தூக்கிக்கொண்டு அலையும் மனிதனாக அசத்தியிருக்கிறார். அவரின் நடிப்பு மெருகேறும் அதே வேளையில் உடலை கவனித்தால் பரவாயில்லை உடல் பருமன் அவருக்கு பிரச்சனையாகலாம்.
ஒளிப்பதிவு இயல்பான வாழ்க்கையை அழகாக எடுத்து காட்டுகிறது. இசை 96 புகழ் கோவிந்த் வஸந்தா படத்திற்கானதை தந்துள்ளார்.
படம் பல இடங்களில் போரடிக்கிறது கொஞ்சம் சுவராஸ்யத்தை கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்.