மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் ‘ஓம் சாந்தி ஓஷானா’ கூட்டணி

மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் ‘ஓம் சாந்தி ஓஷானா’ கூட்டணி

  அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் '2018 'படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். 'ஓம் சாந்தி ஓஷானா' படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி கதையின் நாயகனாக இணைந்துள்ளார். இந்த திரைப்படம் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் கனவு படைப்பாக இருக்கும் என தெரிய வருகிறது. இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் அவருடைய முதல் படத்திற்கு பிறகு மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மேலும் இருவரும் இணைந்த 'ஓம் சாந்தி ஓஷானா' படத்தின் வெற்றியை, இப்படம் மீண்டும் சாத்தியப்படுத்தும் என திரையுலகம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய வேறு எந்த தகவலும் கூடுதலாக வெளியாகவில்லை. '2018' படத்தின் வெற்றிக்குப் பிறகு நிவின் பாலியுடன் இணைந்து ஒரு மசாலா படைப்பை வழங்கி வெற்றி பெறுவதற்காக இயக்குநர்…
Read More
படவெட்டு மலையாள திரைப்பட விமர்சனம் !!!

படவெட்டு மலையாள திரைப்பட விமர்சனம் !!!

  இயக்கம் - லிஜு கிருஷ்ணா நடிப்பு - நிவின் பாலி, அதிதி பாலன் இசை - கோவிந்த் வசந்தா கதை - காலம் காலமாக எளிய மக்களின் நிலம் பறிக்கப்படுவதும் அதற்கெதிராக அவர்கள் பொங்க ஆரம்பிப்பதுமே கதை. நிவின் பாலி ஒரு அத்தலெட் அவருக்கு ஒரு ஆக்ஸிடெண்டில் கால் அடிபட எதுவும் செய்ய முடியாமல் வீட்டில் முடங்குகிறார். மலை கிராமத்தில் அவருக்கு வீட்டை சுற்றிய இடம் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதற்கெதிராக அவர் என்ன செய்கிறார் கிரம மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுமையாக சொல்லியிருக்கிறார்கள். மலையாள படங்களுக்கு என இருக்கும் வழமையான திரைக்கதை மிக மெதுவாக நகரும் காட்சிகள், மனிதர்களின் இயல்பான வாழ்க்கை அதனூடே சொல்லப்படும் பிரச்சனை என கொஞ்சம் 80 களின் படங்களின் ஞாபகத்தை தூண்டுகிறது. படத்தில் அதிகம் தெரிந்த நடிகர்கள் நிவின் பாலி அதிதி பாலன். அதிதி பாலனுக்கு அதிகம் வேலையில்லை. வந்து போகிறார் அவ்வளவே. நிவின்பாலி…
Read More
நடிகர் நிவின் பாலி நடிப்பில் “மஹாவீர்யார்” படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் நிவின் பாலி நடிப்பில் “மஹாவீர்யார்” படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையை தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். மஹாவீர்யார் திரைப்படம் டைம் டிராவல், ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை…
Read More
‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா! – விமர்சனம்

‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா! – விமர்சனம்

1980-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சாந்தி கிருஷ்ணா. சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானவர். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பாரதி-வாசு ஜோடி இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதில் அவர் சுரேஷ் ஜோடியாக நடித்தார். சின்ன முள் பெரிய முள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் உள்பட பல படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தார். கொஞ்சம் பிசியாகவே இருந்த சாந்தி கிருஷ்ணா சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார் மலையாள நடிகர் நிவின் பாலி. அவர் தயாரித்து, நடிக்கும் ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் பிஜு படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.…
Read More
கேரளா கொள்ளைக்காரன் காயம்குளம் கொச்சுண்ணி -யின் வாழ்க்கை படமாகிறது!

கேரளா கொள்ளைக்காரன் காயம்குளம் கொச்சுண்ணி -யின் வாழ்க்கை படமாகிறது!

உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. '36 வயதினிலே' படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ''காயம்குளம் கொச்சுண்ணி'' என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது . '' மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணி யின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் '' என தயாரிப்பு தரப்பு கூறுகின்றனர் . 1980களில் நிஜமாகவே வாழ்ந்த…
Read More