டிராமா : எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் – கிஷோர்!

0
135

மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டிராமா”. இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 நாட்களில் முடித்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இரவு இரண்டு மணிக்கெல்லாம் அடுத்த காட்சிக்கான வசனங்களை படித்து படப்பிடிப்பு தளத்தில் தூங்காமல் ரிகர்சல் செய்து கொண்டிருந்தாராம் கிஷோர். மேலும், படப்பிடிப்பு தளத்தில் தனக்கான உணவை தானே சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார் கிஷோர்.

சக நடிகர்களிடம் எப்போதும் நட்போடு பழகும் பழக்கம் கொண்ட கிஷோர், இப்படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும் நடிப்பைக் கற்றுக் கொடுத்து படப் பிடிப்பில் ஒரு ஆசானாக விளங்கியிருக்கிறார்.

டிராமா படத்தை தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் எனவும் நம்பிக்கை கொண்டிருக்கிறார் கிஷோர்.

சசிகலா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடும் இந்த படமானது வரும் 23 ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.