மெல்லிசை – திரைப்பட விமர்சனம் !!

மெல்லிசை – திரைப்பட விமர்சனம் !!

  தயாரிப்பு: திரவ் இயக்கம்: திரவ் நடிப்பு : கிஷோர், சுபத்ரா, ஜார்ஜ் மரியான், தான்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா ஒளிப்பதிவு: தேவராஜ் புகழேந்தி இசை : சங்கர் ரங்கராஜன் வெளியான தேதி : ஜனவரி 30, 2026 நேரம் : 2 மணிநேரம் 06 நிமிடம் இன்றைய தமிழ் சினிமாவில் வன்முறை, போதை, பழிவாங்கல் போன்ற கதைகள் அதிகம் வரும் சூழலில், குடும்பம், பாசம், இசை, தன்னம்பிக்கை ஆகிய மெல்லிய உணர்வுகளை மையமாக வைத்து வந்துள்ள படம் மெல்லிசை. தனியார் பள்ளியில் பி.டி. ஆசிரியராக பணியாற்றும் ராஜன் என்பவருக்கு (கிஷோர்) இசை மீது இருக்கும் ஆழ்ந்த ஆர்வமே கதையின் தொடக்கம். ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடல் ரியாலிட்டி ஷோவில் அவர் பங்கேற்று அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறுகிறார். ஆனால் இதை விரும்பாத பள்ளி நிர்வாகம், குறிப்பாக பிரின்ஸ்பால், அவரை வேலையை விட்டு நீக்குகிறார். வேலை இழப்பு, சமூக அழுத்தம், குடும்ப…
Read More
“கலியுகம்” திரைப்படம் மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!

“கலியுகம்” திரைப்படம் மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!

முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்”. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு படக்குழுவைச் சந்தித்து,படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார். ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான…
Read More
“தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

“தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். 8 கொண்ட பொலிடிகல் சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது. https://www.youtube.com/watch?v=02Hj6VNYJ88&feature=youtu.be தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால்…
Read More
தமிழக அரசியல் முகத்தை விவரிக்கும் ‘தலைமைச் செயலகம்’ – இயக்குனர் வசந்தபாலன்!

தமிழக அரசியல் முகத்தை விவரிக்கும் ‘தலைமைச் செயலகம்’ – இயக்குனர் வசந்தபாலன்!

இந்தியாவின் முன்னணி ஒடிடி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்ப்பிலுள்ள தமிழ் சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டீசரை இன்று வெளியிட்டது - அதிகாரத்தின் கோரத்தைப் பற்றிப்பேசும் அழுத்தமான அரசியல் திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸை, ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமாருடன் தயாரித்துள்ளார். கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த 8-எபிசோடுகளாக இந்த சீரிஸ் வெளிவரவுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தின் பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது. 'தலைமைச் செயலகம்' மே 17 அன்று பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்படும். தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார்,…
Read More
ஒரே வீட்டில் படமாக்கப்பட்ட “முகை” திரைப்படம்! அறிமுக இயக்குனரின் புதிய முயற்சி!

ஒரே வீட்டில் படமாக்கப்பட்ட “முகை” திரைப்படம்! அறிமுக இயக்குனரின் புதிய முயற்சி!

  அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'முகை'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த படத்தை LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA இணைந்து தயாரிக்கின்றனர்.   விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது… 'முகை' ஒரு அற்புதமான தமிழ் தலைப்பு. இயக்குநர் அஜித்குமார் அவர்களை வாழ்த்துகிறேன். நல்ல தமிழ் தலைப்புகள் இருக்கின்றன, தமிழில் தலைப்பு வையுங்கள் என்று நான் நீண்டகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். மலரின் முன் பருவத்தை குறிக்கும் வகையில் இயக்குநர் தமிழில் தலைப்பு வைத்துள்ளார். இந்த படக்குழுவை வாழ்த்துகிறேன். இந்த காலத்தில் இயக்குநர்கள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக படத்தை உருவாக்குகிறார்கள். தயாரிப்பாளருக்கு கஷ்டம் தராமல்…
Read More
டிராமா : எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் – கிஷோர்!

டிராமா : எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் – கிஷோர்!

மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டிராமா”. இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 நாட்களில் முடித்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இரவு இரண்டு மணிக்கெல்லாம் அடுத்த காட்சிக்கான வசனங்களை படித்து படப்பிடிப்பு தளத்தில் தூங்காமல் ரிகர்சல் செய்து கொண்டிருந்தாராம் கிஷோர். மேலும், படப்பிடிப்பு தளத்தில் தனக்கான உணவை தானே சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார் கிஷோர். சக நடிகர்களிடம் எப்போதும் நட்போடு பழகும் பழக்கம் கொண்ட கிஷோர், இப்படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும் நடிப்பைக் கற்றுக் கொடுத்து படப் பிடிப்பில் ஒரு ஆசானாக விளங்கியிருக்கிறார். டிராமா படத்தை…
Read More
ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் ‘கலியுகம்’ அப்டேட்!

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் ‘கலியுகம்’ அப்டேட்!

பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் திரைப்படம் 'கலியுகம்'. இதனை இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்டபார்வை' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது. போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் 'கலியுகம்', திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருவதாலும், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும் போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Read More
பிரியா பவானி சங்கர் நடிப்பில் புதிய படத்தை வெளியிடுகிறது – ஜீ5 நிறுவனம் !

பிரியா பவானி சங்கர் நடிப்பில் புதிய படத்தை வெளியிடுகிறது – ஜீ5 நிறுவனம் !

2021 ல் ஜீ5 ”மதில்” ”விநோதய சித்தம்” ”டிக்கிலோனா” ”மலேஷியா டு அம்னிஷியா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘பிளட் மணி’ (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில், "'ப்ளட் மணி' படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை…
Read More