பேர் கூட தெரியாத தனது காதலனை தேடும் கர்ப்பிணி பெண்ணின் கதை – ’அமையா’

பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘அமையா’. நிகில் வி.கமல் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கும்  படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.. இவர் 2௦16-ல் ‘மிஸ் மெட்ராஸ்’ பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு S.கௌதம் இசையமைக்க, பாடல்களை இயக்குநர் நிகில்  வி.கமலே எழுதியுள்ளார். ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ P.ஜார்ஜ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் ஹரிஹரன் படத் தொகுப்பை மேற்கொள்கிறார்.

முகவரி, பெயர்  என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதைதான் இந்தப்படத்தின் மையக்கரு.  அமையா  தனது காதல் மற்றும் தனது பழங்குடியின வாழ்க்கையை நினைத்து பார்க்கும்விதமாக படம் துவங்குகிறது.

“தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத இடம் மற்றும் புரியாத பாஷை புழங்கும் இடத்தில் தனது காதலனை ஒரு கர்ப்பிணிப் பெண் தேடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான அதேசமயம் வித்தியாசமான களமாக இருக்கும். அழகான லொக்கேஷன்களும் பழங்குடியினரின் கலாச்சாரம் எல்லாமுமாக சேர்ந்து இந்த ‘அமையா’ மிகப் பெரிய விஷுவல் விருந்தாகவும் இருக்கும்..” என்கிறார் இயக்குநர் நிகில் வி.கமல்.