ஓ மை டாக் திரை விமர்சனம்

இயக்கம் – சரவ் சண்முகம்

நடிகர்கள் – அருண் விஜய், ஆர்ணவ் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார்

உலகம் மாற்றுத்திறனாளிகளுக்கும் சம் உரிமையை தர வேண்டும் என்கிற கருத்தை ஒரு நாயின் மூலம் சொல்ல முயன்றிருக்கும் குழந்தைகள் படம்

கதை – ஒரு சிறுவன் தெருவில் கிடக்கும் கண் தெரியாத நாயை எடுத்து வளர்க்கிறான். அதனால் அவன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. இன்னொரு பக்கம் வில்லன நாயை அடைய முயற்சிக்கிறான். இந்த நிலையில் நாயை கொண்டு போட்டியில் கலந்துகொள்கிறான் சிறுவன் அவன் ஜெயித்தானா என்பதே படம்.

ஓடிடிக்கென்றே நேரடியாக எடுக்கப்பட்டுள்ள 2டி நிறுவனத்தின் தயாரிப்பு. மூன்று தலைமுறையை சேர்ந்த அருண் விஜய், ஆர்ணவ் விஜய், விஜயகுமார், இணைந்திருக்கும் படம், குழந்தைகள் படம் என பல ஆச்சர்யங்கள் இருந்தாலும் படமாக மிகுந்த சோர்வை தருகிறது.

ஓடிடி உலகில் வாராவாரம் கதைகள் தர வேண்டிய அழுத்தம் இருக்கவே தமிழ் சினிமா குறுகிய கால குறும்பட பட்ஜெட் படங்கள் நிறைய எடுத்து அனுப்பி வருகிறது அந்த வகை படைப்பில் ஒன்றாக வந்துள்ளது ஓ மை டாக்.

அருண் விஜயின் மகன், ‘அர்னவ் விஜய்’ க்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகம் அவருக்கு நடிப்பு வெகு இயல்பாக வருகிறது. படத்தில் சொதப்பியிருப்பது என்னவோ மற்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தான் மஹிமா நம்பியார் மனைவியாகவும், தாயாகவும், மருமகளாகவும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் எந்தக் குறையுமில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஏன் இந்த ஓவர் மேக்கப்.


அருண் விஜய் ஒரு மெயின் ஹீரோவை உள்ளே கொண்டு வந்துவிட்டோம் அவருக்கென திணிக்கப்பட்ட காட்சிகள் துருத்திக்கொண்டி தெரிகிறது.

வினய் எங்கு திரும்பினாலும் இவர் தான் தமிழ் சினிமாவில் ஆனால் அவர் உச்சரிப்பும் மேனரிசமும் கவர்கின்றன. ஒரு நொடியில் திருந்தும் அக்மார்க் தமிழ் வில்லன்
மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்டவர்களுடன், வரும் மற்ற குழந்தைகளும் தேவையான நடிப்பை வெளிப்படுத்திருகின்றனர். படத்தில் ‘சிம்பா’-வாக வரும் சைபீரியன் ஹஸ்கி நாய்க்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அடித்து துவைக்கப்பட்ட கதையில் சுவாரஸ்யமாக ஏதும் இல்லாததால் படம் பல இடங்களில் தடுமாறுகிறது. சொல்ல வந்த கருத்து நல்லது என்றாலும் அதை சொல்லிய விதம் இழுவை.

ஓ மை டாக் புதிதாக ஏதும் இல்லை