கோடம்பாக்க கோமகன் அன்புசெழியன் இல்லத் திருமணம்!

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் அன்புச்செழியன். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர் என்று பல வழிகளில் இன்று சினிமாத்துறைக்குள் அன்புச்செழியன் அதிகாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. ஆனால் படமெடுக்க பணம் கேட்டு போகும் எந்த தயாரிப்பாளருக்கும் பணம் இல்லை என்று சொன்னதில்லை. பணத்தைக் கொடுப்பவர், பணம் திரும்ப கைக்கு வரவில்லை என்றால், அடுத்து படத்தையே அதற்கு ஈடாக வாங்கிவிடுவார். இவரால் ஏற்றம் பெற்றவர்கள் சிலர் என்றால், பாதிக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், இந்த சினிமாத்துறைக்கு அரசியல் புள்ளிகளின் பணத்தை முதலீடாக கொண்டு வந்தததில் அன்புச்செழியன் பங்கு அதிகம். இன்றைக்கு அவர் பைனான்ஸ் செய்யும் பணத்தில் அரசியல் புள்ளிகளின் கரண்சியுமே இருக்கிறது.

இப்போது இவருடைய மகள் சுஷ்மிதாவிற்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உறவினரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் மகன் சரணுக்கும் சென்னையில் திருமணம் நடந்துள்ளது . இந்தத் திருமண நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், பிரபு, சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் என பலரும் கலந்து கொண்டனர்.

தற்போது தமிழ் சினிமாவில் அன்புச்செழியன் முக்கிய நபர்களில் ஒருவராக உள்ளார். எந்த படம் ரிலீஸ் பண்ண வேண்டும் என்றாலும் அவரின் உதவி இல்லாமல் ரிலீஸ் செய்ய முடியாது என்பதால் திருமணத்திற்கு வந்த திரைத்துறையினர் மண மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதைவிட மணமகளின் அப்பாவான அன்புச் செழியனிடம் தங்கள் வருகையை உறுதிசெய்வதில் தான் குறியாக இருந்தனர்.

ஆக மணமக்கள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்களுடன்,

அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ், ஆகியோர்..
நேரில் ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்..