கோடம்பாக்க கோமகன் அன்புசெழியன் இல்லத் திருமணம்!

கோடம்பாக்க கோமகன் அன்புசெழியன் இல்லத் திருமணம்!

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் அன்புச்செழியன். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர் என்று பல வழிகளில் இன்று சினிமாத்துறைக்குள் அன்புச்செழியன் அதிகாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. ஆனால் படமெடுக்க பணம் கேட்டு போகும் எந்த தயாரிப்பாளருக்கும் பணம் இல்லை என்று சொன்னதில்லை. பணத்தைக் கொடுப்பவர், பணம் திரும்ப கைக்கு வரவில்லை என்றால், அடுத்து படத்தையே அதற்கு ஈடாக வாங்கிவிடுவார். இவரால் ஏற்றம் பெற்றவர்கள் சிலர் என்றால், பாதிக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், இந்த சினிமாத்துறைக்கு அரசியல் புள்ளிகளின் பணத்தை முதலீடாக கொண்டு வந்தததில் அன்புச்செழியன் பங்கு அதிகம். இன்றைக்கு அவர் பைனான்ஸ் செய்யும் பணத்தில் அரசியல் புள்ளிகளின் கரண்சியுமே இருக்கிறது. இப்போது இவருடைய மகள் சுஷ்மிதாவிற்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உறவினரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் மகன் சரணுக்கும் சென்னையில் திருமணம் நடந்துள்ளது . இந்தத் திருமண நிகழ்ச்சியில்…
Read More
புதுப்படங்களின் வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் – பப்ளிக் ஸ்டார் பாராட்டு

புதுப்படங்களின் வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் – பப்ளிக் ஸ்டார் பாராட்டு

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன. இதை அடுத்து, தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு வரவேற்பு தெரிவித்து இருக்கும் நடிகர் பப்ளிக் ஸ்டார், படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டியிருப்பதோடு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். ‘களவாணி 2’ மூலம் வில்லன் வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். பிறகு விஜய் சேதுபதியின் ‘க/ப ரணசிங்கம்’ படத்தில் ஒரு…
Read More
ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்குக் காலம் முடிவடைந்து சினிமா ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களின் 30% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இன்று பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில்,“தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாகச் சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீளுதலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.   கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை, அதற்கான…
Read More
நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்படாத எம்.எல்.ஏக்கள்! –  சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் விஷால் பேச்சு!

நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்படாத எம்.எல்.ஏக்கள்! – சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் விஷால் பேச்சு!

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில் 22.05.2018 அன்று மாலை ஆறுமணிக்கு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான புரட்சி தளபதி, அயன் மேன் விஷால் அவர்கள் அட்டை வழங்கும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் . சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் தெளிவான நீரோட்டத்தமிழில் வரவேற்புரை வழங்கினார். தலைவர் டி .ஆர் .பாலேஷ்வர், துணைத்தலைவர் டி.ஆர்.ராம் பிரசாத் என்கிற பிரபு, பொருளாளர் மதி ஒளி குமார், இணைச் செயலாளர் ம.அண்ணாதுரை, கவுரவ ஆலோசகர்கள் நெல்லை சுந்தர்ராஜன், மேஜர் தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு ஒளிர்வண்ண போர்த்துதல் ஆடை அணிவித்து வரவேற்றனர் .முதல் அடையாள அட்டையை மூத்த பத்திரிகையாளர் நெல்லைபாரதிக்கு வழங்கிய விஷால், உதடுகளில் தேங்கிய புன்னகையும், முகத்தில் தவழ்ந்த பெருமிதமும் மாறாமல், கடைசி உறுப்பினர் வரைக்கும் கனிவோடு வழங்கி, சங்கத்துக்கு பெருமை…
Read More
வைகோ தயாரிப்பாளர் ஆனார்!

வைகோ தயாரிப்பாளர் ஆனார்!

வேலுநாச்சியார்' மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நாடகத்தை கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ மிக பிரமாண்ட திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.'வேலுநாச்சியார்' வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ. இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: தமிழர்களின் உயிர்க்காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்த்தமைக்காத எங்களை பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்தது. அவர்களின் ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை, நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்ற வரலாற்றை திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மாவின் அருமை திருமகனார் சிரிகாந்தசர்மாவை ஆறரை ஆண்டுக்கு…
Read More
சினிமா டிக்கெட் கட்டணம் ஜிவ்..!: ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா டிக்கெட் கட்டணம் ஜிவ்..!: ரசிகர்கள் அதிர்ச்சி

தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கிடுகிடு என உயர்ந்துள்ளது. நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி., கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. சினிமாவை பொருத்தமட்டில் தியேட்டர் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 18 மற்றும் 28 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. கூடுதலாக தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவீதம் விதிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பின் அந்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. கேளிக்கை வரி தொடர்பாக அரசு சார்பில் ஒரு குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டதில் 30 சதவீதம் கேளிக்கை வரியை, 10 சதவீதமாக குறைத்து அரசு உத்தரவிட்டது. இதற்கும் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 38 (28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 10 சதவீத கேளிக்கை வரி) சதவீத வரியை எங்களால் செலுத்த முடியாது என கூறி நேற்று…
Read More
தமிழ்த் திரை வேலைநிறுத்தம்: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

தமிழ்த் திரை வேலைநிறுத்தம்: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

 சில வாரங்களுக்கு முன்னர் நம் தமிழ்த் திரையுலகில் தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தத்தால் பல தயாரிப்பாளர்கள், பட வெளியீட்டை மாற்றியமைத்து வந்தார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தமிழ்த் திரையுலக வேலைநிறுத்தம் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை என்னவென்றால் வருகின்ற மே 30 முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும்…
Read More