20
Nov
இயக்கம் - ஶ்ரீனிவாச ராவ் நடிப்பு - சந்தானம், ப்ரீதி வர்மா, எம் எஸ் பாஸ்கர் கதை - திக்குவாயால் வாழ்வில் பல வகிகளை அனுபவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்வில் விதி ஒரு விளையாட்டுவிளையாடுகிறது. அந்த விளையாட்டால் அவன் அனுபவிக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து அவன்வெளிவருவதும் தான் கதை. விதி ஒரு பாத்திரமாக கதைக்குள் வருவதும், வழக்கமாக கவுண்டர் காமெடி அடிக்கும் சந்தானம் இதில்திக்குவாயாக நடித்திருப்பதும் தான் வித்தியாசம். மற்றபடி அதே காமெடி ஃபார்முலா படம் தான். கூடவேமாற்றுத்திறனாளிகளால் எதுவும் முடியும் என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள். வழக்கமாக சந்தானம், உடல் குறைபாடுகளை காமெடி என்கிற பெயரில், கேவலாமான வசனங்களால்அர்ச்சிப்பார். இதில் அவரே திக்கு வாய் பாத்திரம். விதி தான் இந்தப்படத்தின் கதையை மாற்றப்போகிறது என முதலில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தின் திரைக்கதை முதல் பாதிக்கும் விதி உள்ளே வந்த பின்னால் நடக்கும் இரண்டாம் பகுதிக்கும்எந்த ஒரு புதிய வித்தியாசமும் தெரிவதில்லை. விதி…
