இயக்குனர் ராம் உடன் நிவின் பாலி இணையும் படத்தின் படபிடிப்பு துவங்கியது

0
252

 

சிலம்பரசன் நடிப்பில் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாகவிருக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தொடர்ந்து வரவேற்கபடும் படங்களாக தயாரித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்தில் பெரும் பாராட்டை பெரும் இயக்குனர் ராம் உடைய அடுத்த படத்தை அவர் தயாரிக்கிறார்.

சுரேஷ் காமாட்சி உடைய  வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் ஒரு புது  படத்தை தயாரிக்கிறது.  படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது..

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கின்றார். கற்றது தமிழ், பேரன்பு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி. மேலும் இந்தப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு : A. ஜான்