அட்லி டைரக்ஷனில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில், அப்பா – இரண்டு மகன்கள் என மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார் விஜய். தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் எகிறிக் கொண்டே வருகிறது. இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய் மேஜிக் மேனாகவும் வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தில் பல கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். விஜய்யின் மேஜிக் மேன் ரோலுக்காக மூன்று பேர் பிரத்யேகமாக பணியாற்றியுள்ளார்கள்.
அதில் மாசிடோனியாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் கோகோ ரெக்கியூம் (Gogo Requiem) என்பவர் மேஜிக் விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். தற்போது அந்த மேஜிசியன் . விஜய்யை புகழ்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மெர்சல் படம் மூலம் ஜோசஃப் விஜய்யுடன் பணியாற்றும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இப்போதைக்கு படத்தைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. இன்னும் சில மாதங்களில் படத்தை மொத்தமாகப் பார்ப்பீர்கள்.
விஜய் அற்புதமான நடிகர் மட்டுமல்ல அட்டகாசமான மேஜிக் மேனும் கூட என்பதை உறுதியாகக் கூறுகிறேன். நான் மட்டுமல்ல, டானி பென்னெட், ராமன் ஷர்மா என இன்னும் இருவர் உடன் இருந்த