Latest Posts

மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

இந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான...

சந்தோஷ் நாராயணன் : பிறந்த நாள் சிறப்புப் பதிவு!

கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ- எங்கே ஆனாலும் இசையமைப்பாளர் ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும், இதில் ஏனைய இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள்...

சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மஹா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள்...

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன்...

அமேசானில் தமிழிலும் ரிலீஸாகி விட்டது – பவர் ப்ளே!

இந்த உலகை ஆட்டி வைக்கும் ஒரு மாபெரும் சக்தி பணம்தான். பணத்தை வைட்டமின் என்றும் பவர் என்றும் எனர்ஜி என்றும் கூறுவதுண்டு.அதேபோல் அதிகாரத்தையும் பவர் என்று கூறுவார்கள். பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகாரம் எப்படி  விளை யாடுகிறது என்பதைக் கூறுகிற கதை இது. அதிகாரமும் பணமும் விளையாடினால் அந்தப் பகடையாட்டம் எப்படி இருக்கும்? அது தான் இந்த ‘பவர் ப்ளே’ படத்தின் கதை.

நாயகன்.ஒருநாள் ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்கிறான் .வெளி வந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.அவனிடம் வந்தவை போலியான ரூபாய் நோட்டுகளாக இருந்தன .இதன் பின்னே ஏதோ சதி இருப்பதாக உணர்கிறான். இதற்குக் காரணமாக யாரோ அதிகாரம் படைத்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிகிறது. .ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான். ஏடிஎம் மையங்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காகப் பல ஏஜென்சிகள் உள்ளன. அவர் கள் செய்த சதியால் தான் இவ்வாறு போலி ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டது என்று தெரிகிறது . அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போராடுகிறான் என்பதும் தான் ‘பவர் ப்ளே’ .

அப்படி மீள்வதற்கான அவனது போராட்டங்களைப் பரபரப்பான காட்சிகளோடு படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தை விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.வனமாலி கிரியேஷன்ஸ் பி.லிட் சார்பில் மகேந்தர், தேவேஷ் தயாரித்துள்ளனர்.

இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பரிச்சயமான பூர்ணா முக்கியமான வில்லி பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். பூர்ணாவுக்கு நடிப்பில் இன்னொரு முகத்தைக் காட்டும் வாய்ப்பு.கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர்.மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ் ,அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு ஆண்ட்ரூ, இசை சுரேஷ் பொப்பிலி,எடிட்டிங் பிரவின் புடி, சண்டை இயக்கம் ரியல் சதீஷ் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளனர். ‘பவர் ப்ளே’ இந்த தலைப்பு ஏன் என்றால் எவ்வளவு பவர் வாய்ந்த அதிகாரம் மிக்கவர்கள் தங்கள் பவரை வைத்து எப்படியான செயல்களையெல்லாம் செய்கின்றனர் என்பதைக் காட்டுவதால்தான் இந்த தலைப்பு என்கின்றனர் படக்குழுவினர்.

அமேசானில் தெலுங்கிலும் இந்தியிலும் வெளிவந்த இப்படம் இப்போது தமிழில் உருவாகி உள்ளது. தற்போது அமேசானில் வெளியாகியுள்ளது

Latest Posts

மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

இந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான...

சந்தோஷ் நாராயணன் : பிறந்த நாள் சிறப்புப் பதிவு!

கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ- எங்கே ஆனாலும் இசையமைப்பாளர் ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும், இதில் ஏனைய இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள்...

சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மஹா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள்...

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன்...

Don't Miss

MGR -ன் உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது. இப்படத்தில்,...

கொரோனா தனிமையால் உருவான “Thousand Kisses” வீடியோ பாடல் !

இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, கோவிட் பொதுமுடக்கத்தில் தன்னை நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து ஒரு அழகான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ். “Thousand Kisses”...

அன்பிற்கினியாள் – விமர்சனம்!

முழுமையாக ஆன் லைன் யுகமாகி விட்ட இந்த கொரோனா காலத்திலும் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லும் கூகுளில் அப்பா-மகள் கதை என்று டைப்-பிட்டு சர்ச் செய்து பாருங்கள்.. அந்த கூகுள் நடத்தும் குடும்பதாரரின்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.