தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் அமைப்புக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தயாரிப்பாளர் விடியல் ராஜுவுக்கு வாழ்த்துகள்.. உங்களது தலைமையில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் உத்வேகத்துடன் செயல்பட்டு தயாரிப்பாளர்களுக்கு வீட்டு வசதி கிடைத்திட ஆவண செய்திட வேண்டுகிறோம், உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முழுமையான ஒத்துழைப்பை நல்கும்” என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கமானது தமிழ்த் திரைப் பட தயாரிப்பாளர் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இதை உருவாக்கியவர் இராம. நாராயணனன். சக தயாரிப்பாளர்களில் பலரும் சொந்த வீடு கூட இருப்பதை அறிந்து எல்லா தயாரிப்பாளர்களுக்கு வீடு கிடைக்க திட்டமிட்டு இச்சங்கத்தை ஆரம்பித்தார்.. அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த வீட்டு வசதி சங்கத் தேர்தலில் நடிகர் பாபுகணேஷ் சங்கத்தின் தலைவர் பொறுப்பிற்கு வந்தார். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் பொறுப்பேற்றவுடன் பாபு கணேஷ் செயல்பாட்டில் திருப்தி இல்லாத காரணத்தால் இந்த சங்கத்தை தன்னிச்சையாக கலைக்கப்படதாக அறிவித்து. அதன் அலுவலகம் இயங்கி வந்த இடத்தையும் பறிமுதல் செய்துக் கொண்டார்.
இதை அடுத்து அண்ணாசாலையிலுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் கட்டிடம் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால், தயாரிப்பாளர் விடியல் ராஜு தன் சொந்த இடத்தை கடந்த 4 வருடம் காலமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் நடைபெற தற்காலிகமாக அனுமதித்து வந்தார்.
அதே சமயம் இந்த சங்கத்தில் இதுவரை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசாங்கத்தால் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது, அதன்படி தற்போது சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் போட்டியிட்ட 11 பேரும் போட்டியின்றி தயாரிப்பாளர் விடியல் ராஜு தலைமையில் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விடியல் ராஜு மற்றும் அவர் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.. இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் களின் வீடு கட்டும் திட்டம் விரைப்படுத்தி முடிக்க பாடுபடுவேன் என்று விடியல் ராஜூ தெரிவித்தார்