அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகி விட்டது த்ரிஷ்யம் 2- ஏன்? – மோகன்லால் விளக்கம்!

கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அமேசாம் ப்ரைம் வீடியோ ரசிகர்களை மகிழ்விப்பதற்கான முயற்சிகளை மேற் கொள்ளவிருக்கிறது. ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஏழு ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முன்கதை சுருக்க வீடியோவை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்) அந்த கொடிய இரவில் என்ன நடந்தது என்பதையும், தன் குடும்பத்தை பாதுகாத்து தான் செய்த காரியங்களை பற்றியும் விவரிக்கிறார். “நீங்கள் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க எவ்வளவு தூரம் செல்வீர்கள்?” என்ற ஜார்ஜ்குட்டி கேட்பதோடு அந்த வீடியோ நிறைவடைகிறது.

ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பவூர் தயாரித்து, ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள,  த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவருடன் மீனா, அன்சிபா, எஸ்தர், சித்திக், ஆஷா ஷரத், முரளி கோபி, மற்றும் சாய்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வரும் பிப்ரவரி 19, 2021 முதல் உலகமெங்கும் அமேசான் ப்ரைம் வீடியோவில் த்ரிஷ்யம் 2 வெளியாகிறது.

முன்கதை சுருக்க வீடியோவை இங்கே காணலாம்