த்ருஷ்யம் 2 திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

0
145

தெலுங்கு க்ரைம்-த்ரில்லர் ’த்ருஷ்யம் 2’க்கான டிரெய்லரை Amazon Prome Video இன்று வெளியிட்டது, தெலுங்கில் வெளிவந்த வெற்றிப் படமான த்ருஷ்யத்தில் நடித்த இதில் வெங்கடேஷ் டக்குபதி தனது பாத்திரத்தை இப்படத்திலும் தொடர்கிறார். மீனா, கிருத்திகா, எஸ்தர் அனில், சம்பத் ராஜ் மற்றும் பூர்ணா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றனர். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சுரேஷ் புரொடக்ஷன்ஸின்D.சுரேஷ் பாபு, ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் ராஜ்குமார் சேதுபதி, மேக்ஸ் மூவிஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் ’த்ருஷ்யம் 2’ நவம்பர் 25 அன்று Amazon Prime \ Video-இல் இந்தியாவிலும் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும்.

முதல் படமான திருஷ்யம் முடிந்த இடத்திலிருந்து துவங்கும் த்ருஷ்யம் 2, ராம்பாபுவின் (வெங்கடேஷ் டக்குபதி) குடும்பம் கடந்த கால நிகழ்வுகள் பற்றிய விசாரணையால் அச்சுறுத்தப்படுவதன் தொடர்ச்சியாகப் பார்வையாளர்களை ரோலர் கோஸ்டர் பயணத்தில் அழைத்துச் செல்கிறது. வரவிருக்கும் Amazon Original திரைப்படமானது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில் நடந்த சம்பவத்தால் பதிக்கப்பட்ட தனது குடும்பத்தை மீட்டெடுத்த குடும்பத் தலைவர் மீண்டும் ஒருமுறை அவர்களைக் காக்க முயல்வது போன்ற மிகவும் பரபரப்பான மற்றும் தீவிரமான மற்றும் கவர்ச்சிகரமான கதையில் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த த்ரில்லர் இருக்கையின் நுனிக்கு பார்ப்பவர்களை இட்டு வருகிறது.

இந்த த்ருஷ்யம் 2 படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான ஜீத்து ஜோசப் கூறுகையில் “த்ருஷ்யம் 2 என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. திருஷ்யத்தின் தொடர்ச்சியுடன் மீண்டும் வருவீர்களா என்று பலர், பல ஆண்டுகளாக என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரவேண்டும் என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்,

ஆனால் எல்லாவற்றுக்கும் அதற்குரிய நேரம் இருப்பதாக நான் நம்புகிறேன். கதையை எப்படித் தொடரலாம் என்று பல வழிகளில் யோசித்து, இறுதியில் எனது நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரின் ஆதரவுடன் அந்தக் கதைக் கருவை யதார்த்தமாக மாற்ற மிகவும் கடினமாக உழைத்த பிறகு, இப்போது இந்தப் படத்தை எங்கள் பார்வையாளர்களுக்குக் கொண்டு வரத் தயாராக உள்ளேன். அவர்களின் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.Amazon Prime Video உடன் இணைவதால் பலரிடையே இப்படத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது., இது’ என்கிறார்.