19
Feb
ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி இன்னியோட ஸ்வீட் 17 இயர்ஸ் ஆனதா வந்த சேதியை அடுத்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி: சேரன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. அப்படத்திற்கு சேரனே நடிகராகவும், இயக்குனராக வும் பல விருதுகளை வென்றுள்ளார். அதில் கோபிகா, சினேகா, மல்லிகா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அந்த ஆட்டோகிராப் படம் ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பருவத்தை கிளறும் வகையில் இருக்கும். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் மஹா ஹிட் அடிச்சு 3 தேசிய விருதுகளை குவிச்சுது. இதேபோல் பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் விருதுகளையும் அள்ளிச்சு இந்த ஆட்டோகிராஃப். இது குறிச்சு டைரக்டர் சேரன்-கிடே பேசினப்போ ”பல பேரு ‘ஆட்டோகிராஃப்’படத்துலே வந்த சம்பவங்கள் தங்களோட வாழ்க்கை நடந்த சம்பவமா நெனச்சாங்க. ஆனா ஒரு விசயம் தெரியுமா? இதே கதையை அப்போ டாப் லிஸ்டில் இருந்த அரவிந்த் சாமி,…