வழக்கமான போலீஸ் கதையல்ல இந்த இபிகோ 302- கஸ்தூரி பிராமிஸ்!

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “ இ.பி.கோ 302 “ இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி க்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.

இ.பி.கோ 302 படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை கஸ்தூரி பேசியதாவது..

இந்த படத்தில் இப்படியொரு கேரக்டரை கொடுத்த டைரக்டர் சலங்கைத்துரை-க்கு முதல் நன்றி. தமிழில் நான் போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இந்தப் படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது. நிச்சயம் இது ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து காத்திரமான குரலை எழுப்பும் படமாக இது இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். என் கேரக்டரை முதலில் சின்னதாகத் தான் எழுதியிருந்தார்கள். பின் நான் இந்தப்படத்தில் ஒப்பந்தமான பிறகு இந்தக் கேரக்டரை மிக அழகாக டெவலப் செய்துள்ளார் டைரக்டர்.

மேலும் படத்தின் கதை திரைக்கதையை இன்னும் வலிமை வாய்ந்ததாக இந்தக் கேரக்டர் மாற்றியுள்ளதாகவும் இயக்குநர் கூறினார்.இயக்குநர் சலங்கைத்துரையைப் பொறுத்தவரை மிகவும் நேர்த்தியான உழைப்பாளி. நேரத்தை துளிகூட வேஸ்ட் பண்ண மாட்டார். முக்கியமாக அவரிடம் எந்தக் குழப்பமும் இல்லாமல் வேலை செய்ய முடியும். அவரின் கடும் உழைப்பால் உருவாகியுள்ள இப்படத்தை மக்கள் அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். ஏன் என்றால் இது இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. குறிப்பாக காதலர்கள் அனைவரும் இப்படத்தைப் பார்க்கவேண்டும். எது காதல் என்பதை இப்படம் பேசியுள்ளது” என்றார்.

படம் வருகிற 25 ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவு – தண்டபாணி

இசை – அலெக்ஸ்பால்

எடிட்டிங் – காளிதாஸ்

கலை – மணிமொழியன்

ஸ்டண்ட் – தீப்பொறி நித்யா

பாடல்கள் – முத்துவிஜயன், ராஜ குணசேகரன்

தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்

இணை தயாரிப்பு – ஆர்.பிரபு

தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி