குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் ” தகவி”. படத்தில் கல கலப்பு

குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் ” தகவி”. படத்தில் கல கலப்பு

ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் " த க வி". "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ..... உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.. என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றையசமுதாயத்திற்கு ஏற்ற ஜீவனான கருத்தை கொண்டு ஒரு படத்தை உருவாக்கி வருகிறோம். இதில் பவாஸ். குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன் " நான் கடவுள் ராஜேந்திரன் கும்மாளமிட்டு கலகலப்பு ஊட்டும் காட்சிகளை சமீபத்தில் சேலத்தில் படமாக்கினோம். குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழியில் நடக்க செய்வது ஒரு சவாலான காரியம். இதை சவாலாக ஏற்று ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்." என்று கூறுகிறார் இயக்குனர் சந்தோஷ்குமார்…
Read More