டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில்  ‘ஷார்ட் கட்’ படத்திற்கு  இரண்டு விருதுகள்..!

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘ஷார்ட் கட்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..!

சர்வதேச புகழ்பெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மணி தாமோதரன் இயக்கியுள்ள 'ஷார்ட் கட்' பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் நாயகனான ஸ்ரீதர், டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான (அறிமுகம்) விருதை பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் உபாசனா, எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் 'அறம்' ராம் ஆகியோர் நடித்துள்ளனர். விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீதர், “எனது முதல் படத்திலேயே இந்த கவுரவமிக்க விருது கிடைத்திருப்பது எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்த டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார். படத்தின் இயக்குநர் மணி தாமோதரன் கூறுகையில், “பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும்,…
Read More
ஜப்பான் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’..!

ஜப்பான் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’..!

சென்ற ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப் படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்ப்பட்டது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி அங்கு திரையிடப்படுகிறது. சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்த இந்த திரைப்படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Read More