சூர்யா-வின் ‘சூரரைப் போற்று’ அமேஸானில் ரிலீஸ்!

0
324

நடிகர் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்பட உள்ளதாக இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2-D எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், சிக்யா எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை, இயக்கம் – சுதா கொங்காரா, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு – நிகேஷ் பொம்மி, கலை இயக்கம் – ஜாக்கி, படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, திரைக்கதை – ஷாலினி உஷாதேவி, சுதா கொங்காரா, திரைக்கதை உதவி – ஆலீப் சூர்டி, கணேஷா, வசனம் – விஜயகுமார், மதுரை வசனங்கள் – பி.விருமாண்டி, உடைகள் வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, நடன இயக்கம் – ஷோபி, சேகர், சண்டை இயக்கம் – கிரேக் பாவல், விக்கி, டால்பி ஆட்மாஸ் மிக்ஸ் – ஜி.சூரன், ஒலி வடிவமைப்பு – சவுண்ட் பேக்டர் விஷ்ணு கோவிந்த், சங்கர், சிறப்பு ஒலி அமைப்பு – அருண் சீனு, ஒப்பனை – எஸ்.சையத் மாலிக், உடைகள் – அருண், புகைப்படங்கள் – சி.ஹெச்.பாலு, விஷூவல் எபெக்ட்ஸ் – சங்கத்தமிழன் – விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா – பாடல் வீடியோ – ஆண்டனி ஜெரோம், கலரிஸ்ட் – சுரேஷ் ரவி, கிராபிக்ஸ் சூப்பர்வைஸர் – விஸ்வாஸ், சாவனூர், வி.எஃப்.எக்ஸ் ஸ்டூடியோஸ் – Silver Cloud Studios, Knack Studios, நிர்வாகத் தயாரிப்பாளர்கள் – அசின் ஜெயின், பவித்ரா, தலைமை தயாரிப்பு நிர்வாகம் – பி.செந்தில்குமார், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், குணீட் மோங்கா, ஆலீப் சுர்டி, தயாரிப்பு – சூர்யா, தயாரிப்பு நிறுவனங்கள் – 2-D எண்ட்டெர்டெயின்மெண்ட் சிக்யா எண்ட்டெர்டெயின்மெண்ட்.

இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை நடத்திய ‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை துவக்கிய ஓய்வு பெற்ற ராணுவ கேப்டனான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

உண்மையில் இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதமே தயாராகி மார்ச் மாத வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கிவிட.. இந்தியாவில் அனைத்துமே லாக் டவுன் செய்யப்பட்டது. அந்த லாக்டவுனில் சிக்கி வெளிவராமல் முடங்கிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

இப்போதும் சினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது என்பது உறுதியில்லாத சூழலில் இத்திரைப்படத்தை கையில் வைத்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையும், கடன் சுமையையும் கூடுதலாக தந்து கொண்டிருந்தது.

எனவே வேறு வழியில்லாமல் இப்போது இந்தப் படத்தை ‘அமேஸான் பிரைம்’ என்னும் ஓ.டி,டி. தளத்தில் வரும் அக்டோபர் 30-ம் தேதி வெளியிடுவதாக இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

ஏற்கெனவே சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருந்த ‘பொன் மகள் வந்தாள்’ திரைப்படத்தையும் இதே ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டார் சூர்யா. இதனால், “இனிமேல் சூர்யா சம்பந்தப்பட்டவர்களின் படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்திருந்தது.

இந்தக் கடினமான சூழலிலும் சூர்யா இப்படியொரு முடிவை தைரியமாக எடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

திரையுலக முக்கியஸ்தர்கள் பலரும் சூர்யாவின் இந்த தைரியத்தை மனமார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.