சினிமா ஷூட் நடத்த மத்திய அரசு அனுமதி!

0
308

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகளை துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என சினிமா பிரபலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது ஊரடங்கு ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதில் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது.இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றினால் உடனே திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும், குறைந்த அளவு பணியாளர்களை கொண்டே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்துள்ள ஜவடேகர், அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே படப்பிடிப்பில் அனுமதிக்கலாம் என்றும், தனிமனித இடைவெளி கட்டாயம் எனவும் கூறியுள்ளார். ஒப்பனை கலைஞர்கள் கவச உடை அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும், ஒப்பனை பொருட்கள் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பார்வையாளர்கள் ரசிகர்கள் உள்ளிட்டோரை அனுமதிக்க கூடாது எனவும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்ட் நிலையில், டிக்கெட் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைன் முறையை பின்பற்றலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள் இதோ:

முக்கவசம் கட்டாயம்.நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும். எச்சில் துப்புவதற்கு தடை

ஆரோக்ய சேது செயலி பயன்படுத்தப்பட வேண்டும்.

தெர்மல் சோதனை செய்யப்பட வேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

6 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட வேண்டும்

தனிமனித இடைவெளியை பின்பற்ற இருக்கைகள் அமைக்க வேண்டும்

டிக்கெட் உள்ளிட்ட முறைகளை நேரடி தொடர்பு பரிவர்த்தனைக்கு பதிலாக ஆன்லைன் முறையை பின்பற்ற வேண்டும்

வேலை நடைபெறும் பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்களை தற்காலிகமாக தனிமைப்படுத்த வேண்டும்

படபிடிப்பு தளம், ரெக்கார்டிங் ஸ்டுடியோ, படத்தொகுப்பு இடங்களில் 6 மீட்டர் இடைவெளி கட்டாயம்

குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு படபிடிப்பு நடத்த வேண்டும்

படபிடிப்பு தளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

வெளிப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகத்தின் உதவியை நாட வேண்டும்

கையுறை, முகக்கவசம், கவச உடை வசதிகள் இருக்க வேண்டும்