லிப் லாக் கிஸ்ஸூக்கு 13 டேக் எடுத்தேனா? ’தடம்’ ஹீரோ அருண் விஜய் மறுப்பு!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல மேல் ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வரும் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் ‘தடம்’. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு ஆகியார் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருண் விஜய் தான் காதலிக்கும் தான்யாவிடம் தனது காதலை சொல்லிவிட நினைத்து அவரை ஒவ்வொரு முறையும் காபி சாப்பிட அழைப்பார். ஆனால் அவர் ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் அழைக்கும் முறை தப்பாக இருக்கிறது என கூறி ஒவ்வொரு முறையும் மறுத்து விடுவார் தான்யா. ஒரு வழியாக சரியான முறையில் வார்த்தைகளை கோர்த்து அவரை காபி சாப்பிட அழைத்துச் சென்று காதலை சொல்லி விடுவார் அருண்விஜய்.

இதை பார்த்துவிட்டு நிருபர்கள் அருண்விஜய்யிடம் அப்படி என்ன வசனத்தை சொல்லி நீங்கள் அவரை காபி சாப்பிட அழைத்தார்கள் என கேட்டனர்.. அதற்கு அவர், “படம் வரும்வரை அது என்னவென்று சஸ்பென்ஸாக இருக்கட்டுமே.. எனக்கே அந்த காட்சி படம் ஆகும் வரை இது தான் வசனம் என்று இயக்குனர் மகிழ்திருமேனி சொல்லாமலேயே தான், காட்சிகளை படமாக்கினார்… அதனால் உங்களுக்கும் கொஞ்ச நாட்கள் அது ரகசியமாகவே இருக்கட்டும்” என பதிலளித்தார்

மேலும் பேசிய அருண்விஜய், “இயக்குநர் மகிழ் திருமேனியுடன் நான் இரண்டாவது முறையாக இணையும் படம் இது. முதல் படம் தடையறத் தாக்க எனக்கு புதிய திருப்புமுனையாக அமைந்தது. படத்தில் டைரக்டர் என்னை முத்தக்காட்சியில் நடிக்கச் சொன்னார் நான் முடியாது என மறுத்து விட்டேன். உடனே எனது மனைவியிடம் சம்மதம் வாங்கி நடிக்க வைப்பதாகக் கூறினார்…

அப்போது குறுக்கிட்டு பேசிய படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, “பிடிக்காமல் நடித்துதான் 13 டேக்குகள் முத்தக் காட்சிக்கு வாங்கினாரா? அதுமட்டுமல்ல தணிக்கைக் குழுவினர் எங்களிடம் கேட்டது இந்தக் காட்சியில் படத்தின் ஹீரோ நடிகையின் உதட்டைக் கடித்துவிட்டாரா என்று கேள்வி மேல் கேட்டனர். இல்லை என அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது,” என்றார். தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதால் இதைப்பற்றி பேசவேண்டாம் என்று அருண் விஜய் மகிழ் திருமேனியிடம் கோரிக்கை வைத்ததைக் கேட்டு நிருபர்கள் கூட்டம்ஜ் கைத்தட்டி ரசித்தது!