மண் மனம் மாறாத இயக்குநர் சுசீந்திரன் உருவாகியுள்ள “சாம்பியன்” இசை வெளியீடு விழா!

சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சாம்பியன்”. விளையாட்டை மையப் படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நடுத்தர மக்களின் வாழ்விய லோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளை யாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடியை நம் மனதில் கொண்டு சேர்த்தவர் இப்படத்தில் புதுமுகங்களுடன் கால்பந்தை தொட்டுள்ளார். விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு இன்று கோலகலமாக நடைபெற்றது. திரைபிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

விழாவில் பேசிய

R K சுரேஷ் பேசியதாவது…

டாகடர் R களஞ்சியம் என்னோட அப்பா, அவரின் நினைவாக அவரோட பேர்ல தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கோம். அவரோட பேரனை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தினதுக்கு சுசீந்தரன் சாருக்கு நன்றி. Studio 9 பற்றி உங்களுக்கு தெரியும். ரொம்ப தேர்ந்தெடுத்த படங்கள் மட்டும் தான் எடுப்போம் அதே மாதிரி இந்த நிறுவனமும் வளரனும். விஷ்வாவை சின்ன வயசுலருந்து தெரியும். ஒரு படத்துக்கு சரியான அறிமுக நடிகரா அவன் உழைப்பை கொடுத்திருக்கான். அவன் இந்தப்படத்துக்கு 1 1/2 வருஷம் டிரெய்னிங் எடுத்திருக்கான். அவன் ஒரு ஸ்குவாஷ் பிளேயர். லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடிப்பு பத்தி படிச்சான். எல்லாவைகயிலும் தன்னை தயார்படுத்திகிட்டு நடிச்சிருக்கான். சுசீந்திரன் சார் ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவர் சராசரியாலாம் படம் எடுக்க மாட்டார்னு எல்லோருக்கும் தெரியும். அப்புறம் இந்தப்படத்தில் நடிகர்கள் எல்லோரும் மிகத்திறமையானவர்கள். மிருணாளினி ஹீரோயினா நடிச்சிருக்காங்க. டிசம்பர் 13 இந்தப்படத்த திரைக்கு கொண்டுவர்றோம் எல்லோரும் ஆதரவு தாங்க நன்றி.

நடிகர் அப்புகுட்டி பேசியது..

“சாம்பியன்” படம் பார்த்தேன் விஷ்வா ஒரு அறிமுக நடிகர் மாதிரியே இல்ல, நல்லா நடிச்சிருக்கார். எங்க டைரகடரால யார வேணா உருவாக்க முடியும்னு தெரிஞ்சது. ஹீரோயின் பார்த்தவுடனே லவ் பண்ற மாதிரி அழகா இருக்காங்க. படம் சூப்பரா வந்திருக்கு. படத்த ஜெயிக்க வைங்க நன்றி.

நடிகர் உதயா பேசியது…

இந்த விழாவுக்கு வரக்காரணம் R K சுரேஷ். அவர் ஒரு விசயம் பண்ணினா தெளிவா பண்ணுவார். அவர் பக்கத்திலிருந்து வந்திருக்கிற தயாரிப்பு நிறுவனம் கண்டிப்பா ஜெயிக்கும். ஹீரோ பார்க்க ஆரம்பகால தனுஷ் மாதிரியே இருக்கார். அவர் மாதிரியே பெரிய ஆளா வருவார். என்னோட நண்பன் மனோஜ் அவர திரையில் பார்க்கவே அழகா இருந்தது. நீ நிறைய படம் நடிக்கனும். நரேனை கைதி படத்தில் பார்த்திருப்போம் இந்தபடத்திலும் கலக்கியிருக்கார். சுசீந்திரன் சார் ஸ்போர்ட்ஸ் படங்கள் சூப்பரா எடுப்பவர். அவர் இந்தப்படம் பண்ணியிருக்கார். கண்டிப்பா படம் ஜெயிக்கும். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இந்திய காலபந்து விளையாட்டு வீரர் ராமன் பேசியதாவது…

இரண்டு வருடம் முன்பு இந்தப்படம் ஆரம்பிக்கும் போது சுசீந்திரன் சார் வந்து என்ன சந்திச்சார் நிறைய கேள்விகள் கேட்டார். ஒரு படம் எடுக்க எவ்வளவு உழைக்கறாங்கனு அப்போதான் தெரிஞ்சது. வெண்ணிலா கபடி குழு வந்தப்போ விளையாட்ட சரியா காட்ட ஒரு இயக்குநர் வந்திருக்கிறார்னு சந்தோஷமா இருந்தது. விஷ்வா விளையாடறத பார்த்து விளையாட்டு வீரரானு கேட்டேன் இல்ல சார் படத்துக்காக கத்துகிட்டேனு சொன்னார்.
அவர் ஒரு தேர்ந்த விளையாட்டு வீரர் மாதிரியே விளையாடினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது படம் ஜெயிக்க வாழ்த்துக்கள்

ஸ்டண்ட் சிவா பேசியதாவது…

சுசீந்திரனோட “நான் மகான் அல்ல” படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சுசீந்தரன் படத்துல நடிக்க கூப்பிட்டப்போ உடனே ஓகே சொல்லிட்டேன். “சாம்பியன்” பேரே நல்லா இருந்தது. சுசீந்தரன் “கோலி சோடா” படத்துல நடிச்ச மாதிரி நடிக்கணும்னு சொன்னார். ஒவ்வொரு இயக்குநர்கிட்டயும் ஒரு உடல் மொழி இருக்கும் இந்த இடத்தில் சொல்லியே ஆகனும் “பசும்பொன்” படத்தில நான் ஆக்சன் காட்சிகள்ல உதவியாளரா வேலை பார்த்தேன். அப்ப பாரதிராஜா சார் பிரபு சாருக்கு ஒரு ஆக்‌ஷன் சொல்லிக்கொடுத்தார். அப்படியே ராதிகா மேடமுக்கு நேரெதிரா எப்படி நடிக்கனும்னு சொல்லித் தந்தார். நான் பிரமிச்சு போயிட்டேன். அது மாதிரி இயக்குநர் சொல்லிக்கொடுக்கிறத நடிக்க எனக்கு பிடிக்கும். இந்தப்படத்தில சுசீந்திரன் சார் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அத தான் பண்ணிருக்கேன். அவர் கிட்ட சிறந்த உடல்மொழி இருக்கு. எனக்கு அமீர்கானின் “டங்கல்” படம் பிடிக்கும் அந்தப்படம் மாதிரி இந்தப்படமும் ஜெயிக்கும் நன்றி.

இயக்குநர் சசி பேசியது…

வெண்ணிலா கபடி குழு வெளியான நேரத்தில சுசீந்திரன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் நீங்க ஏன் படத்துக்கு வந்தீங்கனு கேட்டப்போ எனக்கு வாழ்க்கை தெரியும்னு சொன்னார். அவருக்கு வாழ்க்கை தெரியும்கிறதுக்கு உதாரணத்த இந்த டிரெய்லரோட கடைசி ஷாட் சொல்லுது. அவர்கிட்ட அந்த வாழ்க்கை இருக்கும் வரைக்கும் தொடர்ந்து ஜெயிப்பார். ஒரு சில இசையமைப்பாளர் இசையை தான் தொடர்ந்து கேட்போம் அதில் ஒருவர் அரோல் கொரோலி இந்தப்படத்தில் பாடல்கள் நல்லா இருக்கு. விஷ்வா புதுமுகம் மாதிரியே தெரியல. எல்லோருமே நல்லா நடிச்சிருக்காஙக. சுசீந்திரனுக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிய தர வேண்டிக்கிறேன்.

நடிகர் மனோஜ் பேசியது…

இந்தப்படம் நடக்க சுசி சார் தான் காரணம். ஒரு இரைச்சலான காபி ஷாப்ல தான் எனக்கு கதை சொன்னார். இரைச்சலை மீறி ஒருத்தர் ஈடுப்பாட்டோடு கதை சொல்றாருனா அவர் கதை மேல் எவ்வளவு நம்பிக்கை இருக்கும். அதுக்காகவே ஒத்துகிட்டேன். விஷ்வா ஒரு அறிமுக நாயகன் மாதிரியே இல்ல, நல்லா நடிக்க தெரிஞ்சவர் மாதிரியே நடிச்சிருக்கார். என்னை நல்லா நடிக்க வச்சிருக்காங்க. படம் கண்டிப்பா வெற்றி பெறும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

T ராஜேந்தர் பேசியதாவது…

சமீபகாலமாக நான் எந்த ஒரு ஒலி நாடா விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கியிருந்தேன். ஒதுங்கினால் ஒய்வெடுப் பதற்கு பதுங்கினால் பாய்வதற்கு. சுரேஷ் என்னை அன்பால் அழைத்தார் அதனால் வந்தேன். ஒரு படத்திற்கு அழைத்தால் அந்தப்படத்தை பாராட்ட வேண்டும். எனக்கு பந்தாட்டம் பிடிக்கும். தமிழ் நாட்டில் தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று அடமாக இருந்தவர் பாரதிராஜா. அவரைப்போல் நானும் இருந்தேன் தமிழில் பேர் வைக்க வேண்டும் என்று நாங்கள் பட்ட பாடு போதும். இனி வரும் தலைமுறை பிழைத்து கொள்ளட்டும். விஷ்வா விஷ் பண்ண வாவென அழைத்தார் அதனால் வாழ்த்த வந்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு அடையாளாம் இருக்கு. சுசீந்திரனுக்கும் ஒரு அடையாளம் இருக்கு வெண்ணிலா கபடி குழு. அந்தப்படம் போல் இந்தப்படமும் ஜெயிக்கும்.

அமைச்சர் விஜய பாஸ்கர் பேசியதாவது…

வெளியே மழை, உள்ளே கலை. இந்த கலை விழாவிற்கு அழைத்த தற்கு நண்பர் R K சுரேஷ் அவர்களுக்கு நன்றி. எனக்கு விருப்பமானவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். பாரதிராஜா, T ராஜேந்தர் படங்கள் எனக்கு பிடிக்கும். இவர்கள் இருக்கும் மேடையில் நானும் கலந்து கொண்டது பெருமை. சுசீந்திரன் தரமான படங்கள் தரும் கலைஞர் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நாயகி சௌமிகா பேசியது…

இவ்வளவு பெரிய படத்தில் வாய்ப்பு குடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி. மேடையில் பெரிய ஜாம்பவான்ங்கள் இருக்காங்க எல்லோ ருக்கும் நன்றி. ஷூட்டிங் முதல் நாள் எப்பவும் எனக்கு தூக்கமே வராது பயமா இருக்கும் ஆனா ஷூட்டிங்கில் இயக்குநர் ரொம்பவும் பொறுமையா சொல்லி தருவார். அவரால் தான் நான் நன்றாக நடித்திருக்கிறேன். எல்லோரும் என்னிடம் அன்பாக இருந்தார்கள் படம் நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.


மிருணாளினி பேசியது…

சுசீந்திரன் சார் ரொம்ப ஃபிரண்ட்லியா இருப்பார். அவர் படத்துல நடிக்கும்போது, நமக்கு பிடிச்ச டீச்சரோட கிளாசுக்கு போய்ட்டு வர்ற மாதிரி போய் நடிச்சுட்டு வந்துடலாம். விஷ்வா லவ்லியான பையன். ஆனா ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப ஆர்வமா இருப்பார். சரியா செய்யனும்னு துடிப்பா இருப்பார். இந்தப்படத்தில் நடிச்சது சந்தோஷமான அனுபவமா இருந்தது. படத்தில் எல்லோருமே கடுமையா உழைச்சிருக்கோம். படம் பாருங்க வாழ்த்துங்க நன்றி.

இசையமைப்பாளர் அரோல் கொரோலி பேசியது…

சுசீந்திரன் ஆபிஸ்ல இருந்து எனக்கு கால் வந்தது. எல்லா இசையமைப்பாளருக்கும் எப்பவுமே ஸ்போர்ட்ஸ் படம் பண்ண ஆசையிருக்கும். அதுல நமக்கு நிறைய ஹோப் இருக்கும் இந்தப்படத்தோட கதை கேடப்பபோ என்னை நிரூபிக்க இந்தப்படத்தில் நிறைய இடங்கள் இருந்தது. அருமையான கதை எழுதியிருக்கார் சுசி சார். விஷ்வா ரொம்ப அமைதியா இருப்பார் ஆனா திரையில் கலக்கியிருக்கிறார். நரேன் சூப்பரா பண்ணிருக்கார். படம் கண்டிப்பா ஜெயிக்கும் நன்றி.

பாரதி ராஜா பேசியது…

நானும் டி ராஜேந்தர் மாதிரி பேசாம வந்துடலாம்னு வந்தேன் அவனே பேசிட்டான். அப்புறம் நமக்கு என்ன பேசலாம். அவன் எமோஷனல் மேன். அவனை எனக்கு பிடிக்கும். என்னையும் அவனுக்கு பிடிக்கும் சுசீந்தரன் எனக்கு பிடித்த கலைஞன் பாண்டிய நாடு படத்தில் முதலில் நான் நடிக்க ஒத்துக்கல, இப்ப போய் ஏன் நடிச்சுகிட்டுனு நினைச்சேன் ஆனா அது எனக்கு ஒரு கம்பேக்கா இருந்தது. சுசீந்திரன் படம் எல்லாமே நல்லாத்தான் இருக்கும் அவன் படம் பார்த்து படம் எப்படி இருக்கும்னு சொல்ல தேவையில்ல அவன பார்த்தே சொல்லிடலாம். அவன் படம் இது அவனுக்கு இன்னொரு மகுடமாக இருக்கும் வாழ்த்துக்கள்.

நரேன் பேசியது..

சுசீந்திரன் சார் படங்களுக்கு நான் ரசிகன் அதுனால தான் இந்தப்படம் நடிக்க ஒத்துக்கிட்டேன். சுசீந்தரன் ஒரு அருமையான நடிகர் அவர் சொல்லிக்கொடுக்கறத நடிச்சாலே போதும். அதுனால தான் மனோஜ்,வினோத் எல்லாம் நல்லா நடிச்சிருக்காங்க. விஷ்வா புது நடிகர். அவர் கூட தான் எனக்கு நிறைய காட்சிகள் இருந்தது. அருமையா நடிச்சிருக்கார். பெரிய இடத்துக்கு போவார். இந்தப்படத்தில் வேலை பாரத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நாயகன் விஷ்வா பேசியது…

இந்த மேடை நெருக்கமானது எனக்காக எல்லாரும் வந்திருக்கீங்க அதுக்கு நன்றி. என்னோட அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம். இந்தப்படமே ஒரு அப்பா மகன் கதை தான் அது மாதிரி நிஜ வாழ்விலும் என்ன சின்ன வயசுலருந்து எழுப்பி, குளிப்பாட்டி, ஸ்கூல் கூட்டிப்போய் இப்படி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சவர் அவர் தான். அப்புறம் சுசி சார் அவர் தான் இந்தப்படம் உருவானதற்கு முக்கியமான காரணம் சார் உங்களுக்கு நன்றி. இதுக்கு மேல என்ன சொல்லனும்னு தெரியல நன்றி சார். ரொம்ப எமோஷலான நேரம் என்ன வாழ்த்தின இந்த இடத்துக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ராகவி பேசியது…

என்னோட அப்பாவோட ஆசிர்வாதம் தான் இது எல்லாமே! இன்னக்கி இது நடக்க காரணம் சுசி சார் தான். படத்த அணுஅணுவா ரசிச்சு, எங்க பையன அழகா காட்டிருக்கார். அவருக்கு நன்றி. படம் அருமையா வந்திருக்கு பார்த்து ஆதரவு தாங்க நன்றி.

இயக்குநர் சுசீந்திரன் பேசியது…

இந்தப்படத்தில் பாடகர் கார்த்தியை அறிமுகப்படுத்தியது மொத்த படக்குழுவுக்கும் பெருமை. அவர் தான் உண்மையான சாம்பியன். அரோல் கொரோலி ரொம்ப அருமையான பின்ணணி இசை தந்திருக்கார். நரேன் சார் அவர் கிட்ட 10 நாள்னு சொல்லி நிறைய நாள் வேல வாங்கிட்டேன். அடுத்த படத்தில் சரி பண்ணிடுறேன். மனோஜ்க்கு இந்தப்படம் ஒரு கம்பேக்கா இருக்கும், நான் அறிமுகப்படுத்தினதிலேயே சிறந்த நடிகரா விஷ்வா வருவார். கடுமையான உழைப்பாளி தனுஷ் மாதிரினு அவர பத்தி சொல்லிருக்கேன். அவர் மாதிரி கண்டிப்பா பெரிய இடத்தை அடைவார். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. பாரதி ராஜா சாருக்கு நன்றி.