சாம்பியன் படத்தில் என்ன ஸ்பெஷல்? – ஹீரோ விஷ்வா பேட்டி!

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப் படம் “சாம்பியன்”. காதல், பாசம், பழிக்குப்பழி என்ற வழக்கமான கதைகளுக்கிடையே அபூர்வமாக ஸ்போர்ட்ஸை மையப்படுத்தி தயாராகி ரிலீஸாகும் திரைப்படங் களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ’வெண்ணிலா கபடிக்குழு’ ‘ஜீவா’, ‘கென்னடி கிளப்’ போன்ற படங்கள் மூலம் விளையாட்டை விளையாட்டா பார்க்காமல் அதனுள் உள்ள அரசிய லையும் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டியவர் சுசீந்தரன். அவர் தற்போது நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். விஷ்வா என்ற புதுமுகம் இப்படத்தில் கால்பந்துடன் களமிறங்கி உள்ளார். விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் இன்று வெளியாகிறது. இந்த விஷ்வா தற்போது தயாரிப் பாளராகவும் பிரபலமாகி உள்ள ஆர்.கே. சுரேஷ் மருமகன். நேஷனல் ஸ்விம்மிங் மற்றும் இண்டர்நேஷனல் ஸ்குவாஷ் பிளேயர்.

தற்போது பார்ப்பதற்கு சுசீந்தரன் குறிப்பிட்டது போல் அந்த கால தனுஷ் மாதிரியும், ஆரம்பகால விஜய் போலவும் கேஷூவலாக இருந்த விஷ்வா-விடம் பேச்சுக் கொடுத்த போது,“நான் சின்ன வயசில் அதாவது மூனு வயசில் இருந்து ஏழெட்டு வயசு வரைக்கும் நீச்சல் கற்றேன். அப்புற ஸ்குவாஷ் விளையாட்டில் ஆர்வம் காட்டி, 15 வயசு வரை அதில் வெறித்தனமாக விளையாடினேன்.

அந்த சூழலில்தான் சினிமாவில் சேர்ந்து ஏன் சாதிக்க கூடாது என்ற நினைப்பு வந்துச்சு. அதுக்காக ஆரம்பத்தில் சில ஷார்ட் பிலிம் எடுத்தேன். அதே ஆர்வம் இருந்ததால் 12 ஆம் வகுப்பு முடிச்சதும் கலிபோர்னியா போய் ‘நியூயார்க் பிலிம் அகாடெமியில்’ 4 வருடம் பிலிம் மேக்கிங், ஆக்ட்டிங் எல்லாம் படிச்சிட்டு வந்து இங்கே வந்து சீனு ராமசாமி சார், பாலா போன்ற இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். என்ன ரீசனோ எனக்கு யாரும் நடிக்க வாய்ப்பளிக்கவில்லை.

இதுக்கிடையிலே சினிமாவில் எனக்கு தெரிந்த ஒரே அண்ணன் நடிகர் சூரி. அவர்தான் இயக்குநர் சுசீந்திரனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் என்னை பார்த்து விட்டு, ஃபுட்பால் பற்றி ஒரு படம் எடுப்பதாகக் கூறி அதற்க்காக என்னை முறையான பயிற்சி எடுக்குமாறு சொன்னார்.

இதுக்காக புழலில் இருக்கும் ஃபுட்பால் கிரவுண்ட் போய் ஐ சி எப் சாந்தகுமார் என்பவரிடம் ஒரு வருடம் பயிற்சி எடுத்தேன். பயிற்சி-ன்னு லேசா சொல்லிட முடியாது.. டெய்லி மினிமம் எட்டு மணி நேரம் பந்தோடு போராட்டம். எர்லி மார்னிங் எழுந்து ஐந்தரை மணியில் இருந்து 10 மணி வரைக்கும் அப்புறம் ஈவ்னிங் நாலஞ்சு மணி நேரம்..-முன்னு ஹார்ட் ஒர்க் பண்றதை சுசீ சாரே நேர்லே பார்த்துட்டு இந்த படத்தை ஆரம்பிக்க தயாரானார்.. ஆனா திடீர்னு இந்த படத்தை புரொட்யூஸ் பண்ணறதா இருந்தவர் ஜகா வாங்கிட்டதாலே என் வாழ்க்கைக்காக என் அம்மாவே தயாரிப்பாளராகி இந்தப் படத்தை தயாரிச்சிட்டாங்க “என்றவரிடம் “பிகில்ன்னு ஒரு பெரிய ஹீரோவோட படம் வந்து வெற்றியடைஞ்சிருக்குது.. இப்போ கூட ஜடா-ன்னு ஒரு படம் இதே கால்பந்தாட்டம் பற்றி படம் ரிலீஸாகி இருக்குது.. இந்த சூழலில் உங்க சாம்பியன் படத்தில் என்ன ஸ்பெஷல்?” என்று கேட்ட போது “விஜய் சாரோட ஃபேன் நான்.. அவர் நடிச்ச படங்களை அவருக்காகவே பார்க்கிறாங்க. சூப்பர் ஹீரோவான அவர் என்ன கேரக்டர்லயும் வரலாம். அதை நாம ரசிக்கலாம். தொழில்நுட்ப விஷயங்களும், பிரமாண்டமும் தாண்டி எந்தக் கேள்வியும் பெரிசா இருக்காது. ஆனா, எனக்காக சாம்பியன் படம் இல்லை. அதனால, எந்தத் தவறு இருந்தாலும் உடனடியா தெரிஞ்சிடும்.

அதனால, இந்தப் படத்துல கால்பந்தாட்ட விஷயங்கள்ள எந்தத் தப்பும் வராம பண்ணியிருக்கோம். இந்தப் படத்து மேல இருக்கிற எதிர்பார்ப்பு என்பதே இது சுசீந்திரன் சார் மேல இருக்கிற நம்பிக்கைதான். அதைக் காப்பாற்றும் அளவுக்கு கடுமையா உழைச்சு உருவாக்கியிருக்கிற படம். அதனால் ‘பிகில்’ பாத்து ரசிச்சவங்கக் கூட இந்த சாம்பியன் படத்தைப் பார்த்தா இரண்டுக்குமான ஒப்பீடு ஒன்றுமே இல்லாம இது வேற முயற்சியா தெரியும். எங்க உழைப்புக்காக ரசிக்க முடியும்.

அதோட ‘பிகில்’ படத்துக்கு முன்னாலேயே தொடங்கிய படம் இது. நாலு வருஷத்துக்கு முன்னாடியே தொடங்கிட்டோம். இதுல நான் ஸ்கூல் பையனா தொடங்கி கல்லூரி மாணவனா வர்ரேன். அதனால அந்த மெச்சூரிட்டியை மேக்கப்பை நம்பாம, நேரடியா தெரிய வைக்கவும் இந்தக் காலக்கட்டம் தேவைப்பட்டது. அதோட விளையாட்டு சாதனையை மீறிய ரிவெஞ்ச் ஒண்ணும் அப்பா- மகன் பிரியமும் படத்துல அழுத்தமக இருக்கு. அது வித்தியாசமா இருக்கும்..!.

குறிப்பா இந்த சாம்பியன் படத்தில் நான் நடிக்கும் வறுமை காரணமாக திறமையை வெளிக்காட்ட முடியாத விளையாட்டு ஆர்வலன் கதாபாத்திரம். அதை மிகச் சரியாக செய்திருக்கிறேன்.. எனக்கு தந்தையாக மனோஜ்பாரதி சார் நடித்திருக்கிறார். நடிகர் நரேன் எனக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக வருகிறார். இப்படத்தில் எனக்கு ஜோடியாக சௌமிகா மற்றும் மிர்னாலினி ஆகிய இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்தப்படம் புழல், ராயபுரம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.” என்றவரை இப்போதே சில இயக்குநர்கள் அணுகி அடுத்தப் படத்துக்கு கதை சொல்ல வருகிறார்களாம்.. ஆனால் விஷ்வா இன்று ரிலீசாகும் இப்படத்தை ரசிகர்களோடு பார்த்து விட்டுதான் அடுத்த படம் குறித்து யோசிப்பாராம். இந்த விஷ்வாவுக்கு இசையிலும் விசேஷ ஆர்வம் உண்டு . நிறைய தனிப்பாடல்கள் உருவாக்கி வைத்திருப்பதாகவும் வாய்ப்புக் கிடைத்தால் மியூசிக் டைரக்டராக் கூட வர தயார் என்கிறார்.

ஆக.. கோலிவுட்டின் புது வரவான சாம்பியன் விஷ்வா கோலிவுட்டில் கோல் அடிக்கப் போவது நிச்சயம்!- கன்கிராட்ஸ் விஷ்வா!!