ஹவுஸ் ஓனர் படத்தில் என்ன ஸ்பெஷல் – லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பேட்டி!

கடந்த 2012ல் வெளியான ஆரோகணம் திரைப்படம் குறைந்த பொருட்செலவில் வலுவான கதைக் களத்துடன் உருவாகி கவனம் பெற்றது. அதை அடுத்து 2016ம் வருஷம் இயக்கத்தோடு, தனது மாறு பட்ட நடிப்பின் மூலம் வெளியானது அம்மணி திரைப்படம். இந்த இருப் படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களைத் தொடர்ந்து ஹவுஸ் ஓனர் என்ற படத்தை தற்போது இயக்கி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். சென்னை வெள்ளத்துக்கும் 1970-களில் நடக்கும் ஒரு வரலாற்றுச் சம்பவத்துக்குமான ஒரு தொடர்பை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில், ஹவுஸ் ஓனராக ஆடுகளம் கிஷோர் நடித்துள்ளார். காதல் ஜோடி கதாபாத்திரங்களில் பசங்க கிஷோரும், லவ்லினும் நடித்துள்ளனர். இவர்களை சுற்றி நடக்கும் மொத்த படத்தின் படப்பிடிப்பும் சென்னை மற்றும் கேரளாவில் நடத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கும் நிலையில் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை பற்றி டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்ன விஷயங்கள் இது:

‘சில வருடங்களுக்கு முன் சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது எனக்கு தெரிந்தவரின் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அந்த உண்மை சம்பவத்தையே, ‘ஹவுஸ் ஓனர்’ பெயரில் படமாக்குகிறேன். இதற்காக ஈசிஆர் பகுதி பண்ணை நிலம் ஒன்றில் ஆழமாக பள்ளம் தோண்டி நிஜ வீடு கட்டப்பட்டது.

ஆழத்தில் வீடு கட்டியதற்கு காரணம் எந்நேரமும் வீட்டுக்குள் வெள்ள நீர் தேங்கி நிற்க வேண்டும் என்பதால்தான். தரைமட்டத்தில் கட்டினால் தண்ணீரை தேக்கி வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது அல்லவா?  படப்பிடிப்பில் ஒருநாளைக்கு 11 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன் படுத்தப் பட்டது. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நீர் முழுவதும் சுத்திகரித்து அப்பகுதியில் உள்ள கிணற்றிலேயே விடப்பட்டது.

ஜிப்ரான் இசை மிக அருமையாக வந்திருக்கிறது. என் கணவர். ராமகிருஷ்ணன் இந்தப் படத்தை தயாரிக்க போட்ட ஒரே கண்டிஷன் – நான் இப்படத்தில் நடிக்கக் கூடாது என்பதுதான். ஆனால் இப்போ நல்ல ஆக்டிங் சான்ஸூக்காக காத்திக்கிட்டிருக்கேன்.

ஆடுகளம் கிஷோர் தங்குவதற்கு கூட ஓட்டல் அறை கேட்காமல் பட அலுவலகத்திலேயே தங்கி நடித்தார். அவ்வளவு எளிமை. அவருக்கு சம்பளமும் குறைவாகத்தான் கொடுத்தோம். இந்த ஹவுஸ் ஓனர் படத்தை ஆறு மாசம் ரிலீஸ் செய்யறதை தள்ளிப் போட்டுட்டு ஃபிலிம் பெஸ்டிவல் எல்லாத்துக் அனுப்புங்க-ன்னு நிறைய அட்வைஸ்.. ஆனா புரொடியூசர் அதுக்கு ஒப்புக்கலை…சகல தரப்பினரும் முழு மனசோடு உழைத்து உருவான இந்த படம் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் என்பதால் ஜூனில் உலகமெங்கும் ரிலீஸ் செய்கிறோம்” என்றார். Posted in Running News2சினிமா செய்திகள்PrevPrevious PostNextசில ஆண்டுகளாகவே தமிழகத்தில் சிக்கலான சூழ்நிலை!?

Search for: