காதலர்களின் கதைதான் ‘ரீல்’!

ஒரு காதல் கதையில் இருக்கும் உண்மையும், அதன் தன்மையுமே அந்தக் காதல் கதா பாத்திரங்களின் வலிமையை  உணர்த்தும். இந்த வகையான காதல் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறையவே கண்டுள்ளது. இத்தகைய தமிழ்ச் சினிமாக்களின் வரிசையில், நம்பிக்கையோடு அடுத்து வருகிறது ‘ரீல்’ திரைப்படம். ஸ்ரீமுருகா மூவி மேக்கர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

நாயகன் உதய்ராஜ் மற்றும் நாயகி அவந்திகா இருவரும் காதலர்கள் என்கிற கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு சந்தோஷ்  சந்திரன் பாடல்களையும், அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய, சாய் சுரேஷ் படத் தொகுப்பு செய்கிறார். படத்தின் கதையை T.N.சூரஜ் எழுத, முனுசாமி என்னும் அறிமுக இயக்குநர் இந்த ‘ரீல்’ படத்தை இயக்குகிறார்.

‘ரீல்’ படம் பற்றி இயக்குநர் முனுசாமி பேசுகையில், “காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது. தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம், இப்படத்தின் தலைப்பான ‘ரீல்’ என்பது… எதற்காக என்று கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும். படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும் கருத்தும் மக்களை வெகுவாக கவரும்.

கோவை, மெலுகொட், கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது…” என்றார்.