காஷ்மீர் உயிர் தியாகம் செய்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி வழங்கிய அம்சவர்த்தன்!

0
295

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு தென்னிந்திய திரை பிரபலங்கள் பலர் ஜஸ்ட் ட்விட்டரில் இரங்கல் மட்டும் தெரிவித்த நிலையில். இந்த பேரிழப்பில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னதுடன் உடனடி உதவித் தொகையாக ரூ 2 லட்சம் வழங்கி உள்ளார் கோலிவுட் நாயகன் அம்சவர்த்தன்.

கடந்த வாரம் நடந்த தீவிரவாத தாக்குதலில், தமிழக ராணுவ வீரர்களான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சவலப்பேரி மேலத்தெருவில் உள்ள சுப்ரமணியமும், அரியலூர் மாவட்டம் உடையார்  பாளையம் பழூர் கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த சிவசந்திரனும் உயிரிழந்தனர். இந் நிலையில் இந்த சோக சம்பவம் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது புல்வாமாவில் நடந்த கோழைத்தனமான தாக்குதல் பற்றி அறிந்து மிகவும் மனமு டைந்தேன். அவர்கள் குடும்பாத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார். மேலும் bharatkeveer.gov.in இந்த லிங்கை பகிர்ந்துள்ள சூர்யா, நன்கொடை வழங்கி வீரமரணம் அடைந்தவர் களின் குடும்பத்தாருக்கு நாம் அவர்களுடன் இருக்கிறோம் என்பதை காட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தலைவர் விஷால், ‘ புல்வாமாவில் நடந்த தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது. இத்தனை பேர்நாட்டிற்காக உயிர்தியாகம் செய்திருக்கின்றனர். அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று ஒரு ஸ்டேட்மென் விடுத்துள்ளார்.

இது போல் மேலும் பலரும் ஓசியில் கிடைத்த போனில் ஓசி இணையதளமான ட்விட்டரில் இரங்கல் என்ற வார்த்தையுடன் எதையோ தெரிவித்துள்ள நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில், தமிழக ராணுவ வீரர்களான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சவலப்பேரி மேலத்தெருவில் உள்ள சுப்ரமணியமும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பழூர் கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த சிவசந்திரனும் உயிரிழந்தனர். இருவரது வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறி, இரு குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் நிதி வழங்குவதாக தெரிவித்து தான் சொன்ன படி இன்று சுப்ரமணியம் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லி உதவித் தொகையை வழங்கியுள்ளார் ஆக்டர் அம்சவர்தன்.

இளம் நடிகரான அம்சவர்தன் மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன். ”இந்த புல்வா மாவில் சதிகார தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவிகளை அறிவித்து இருக்கிறார்கள். ஆனாலும் நாம் நம் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ தன்னுயிரை தியாக செய்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக கொஞ்சம் நிதியுதவி செய்ய விருப்பப்பட்டு இதை செய்திருக்கிறேன். என் உதவியை மறுக்காமல் வாங்கிக் கொண்ட சுப்பிரமணியம் குடும்பத்தா ருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.. நாளை அரியலூர் சிவசந்திரன் வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லி இரண்டு லட்சம் நிதியை வழங்கப் போகிறேன்.இந்த குடும்பங்களுக்கு நிதி மட்டும் இல்லாமல் நாமும் பக்கப் பலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்