‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாகும் நடிகர் லிங்கேஷ் யார் தெரியுமா?

ன்று தமன்னாவோடு ‘கல்லூரி’ படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தும் திரையுலகில் தொடர்ந்து நடிக்க முடியாமல் காணாமல் போன நடிகர் லிங்கேஷ், இன்று ‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாக மீண்டும் வந்துள்ளார்.

நடிகர் லிங்கேஷ் பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும், கதாநாயகனாக இப்போதுதான் ‘காலேஜ் ரோடு’ படத்தில் அறிமுகமாகிறார். ஏறக்குறைய கல்லூரி படத்திற்காக 10 வருடங்களுக்கு முன்னால் எடையை குறைத்து இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த லிங்கேஷ் பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை கடந்து , மெட்ராஸ், கபாலி பரியேறும் பெருமாள், ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார். கடின உழைப்பும் , அர்பணிப்போடும் போராடி அன்று கல்லூரியில் படத்தில் கதா நாயகனாக நடிக்காமல் விட்டதை காலேஜ்ரோடு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி சாதித்து விட்டார்.

இந்தப் படத்தை M.P.Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான ஜெய் அமர்சிங் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக் குழுவினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் ரஞ்சித் படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு திரைப்படம் பெரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இந்த ‘காலேஜ் ரோடு’ படம் வரும் டிசம்பர் 30-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பி.வி.ஆர். பிச்சர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.