விஜய் படம் பூஜையுடன் ஸ்டார்ட் ஆயாச்சு!

0
243

நடிகர் விஜய்யின் 63-வது படம்  சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தை AGS Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் 20-வது திரைப்படம் இதுவாகும். இதுவரையிலும் இந்த நிறுவனம் தயாரித்த படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமும் இதுவேயாகும்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர் கதிர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் மற்றும் பல பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

vijay-63-poojai-stills-2

தயாரிப்பு நிறுவனம் – ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் – கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ், கதை, திரைக்கதை வசனம், இயக்கம் – அட்லி, இசை – ஏ.ஆர்.ரஹ்மான், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவு – G.K.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன் L.ஆண்டனி, கலை இயக்கம் – T.முத்துராஜ், சண்டை இயக்கம் – அனல் அரசு, பாடல்கள் – விவேக், நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்.

‘வில்லு’ படத்திற்கு பிறகு விஜய்யுடன், நயன்தாரா இந்தப் படத்தில்தான் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றி படங்களின் வெற்றி இணையர்களான விஜய்யும், இயக்குநர் அட்லியும், மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைகிறார்கள்.

vijay-63-poojai-stills-3

இந்தப் படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள், இயக்குநர் அட்லீ மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்திற்காக பெரம்பூர் பின்னி மில்லில் வட சென்னை பகுதியை போல செட் போடப்பட்டுள்ளது.

வட சென்னை பகுதியில் இருக்கும் ஒரு கால்பந்து பயிற்சியாளர் பற்றிய கதை இது என்கிறார்கள். விஜய் இந்தப் படத்தில் இந்திய அளவிலான மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கவுள்ளாராம்.