இந்திய இசை கலைஞர்கள் தங்கள் பயணத்தில் பல்வேறு ரசிகர்களையும் ரசிப்புத்தன்மைகளையும் கடந்து வருகின்றனர். இது அவர்களுக்கு தங்கள் கலையை பட்டை தீட்டவும், உலகத்தரத்துக்கு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தற்கால இசை விரும்பி கள் அனைவரும் கலைஞர்களிடமிருந்து தனித்தன்மையை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், அதை கொண்டாடவும் தயாராக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் டி. இமான் தனது 16 வருட இசை பயணத்தில் பல புதுமுகங்களையும் திறமையாளர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிராமிய இசையை திரை இசையோடு இணைத்த பெருமையும் அவருக்கு உண்டு.
தற்போது இசையமைப்பாளர் டி. இமான், கனடா அரசின் டோரொண்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை தூதுவராக நியமாகிப்பட்டிருக்கிறார். தமிழ் இருக்கைக்காக அவர் இசையமைத்த ” எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” பாடல் தமிழ் கீதமாக அங்கீகரிக்கபட்டுள்ளது.
இது குறித்து டி. இமான் கூறுகையில் ” கனடாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான டோரண்டோ பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் இந்த கவுரவம், உலகமெங்கிருக்கும் தமிழர்களின் பெருமையாகவே கருதுகிறேன். கேம்பிரிட்ஜ் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து டோரொண்டோ பல்கலைக்கழகமும் “தமிழ்” மொழியை அங்கீகரிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
இப்பெருமைக்குரிய நிகழ்வு தமிழ் இசையமைப்பாளர்களை உலகத்தரதிற்கு கொண்டுசெல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழ் வட்டாரத்தில் இமானின் வெற்றி இன்னும் பல திறமைமிக்க இசைகளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையும் உத்வேகத்தையும் தரும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர்.
Related posts:
கண்ணீருடன் பிரியாவிடை😭.. டி.பி.கஜேந்திரன் எனும் நான்...!February 5, 2023
'மெரினா புரட்சி’ படத்துக்கு தணிக்கைக் குழு தடை..!November 8, 2018
வாரிசுகளின் எதிர்காலம் குறித்து ‘தொட்ரா’ விழா மேடையில் கண்கலங்கிய ‘குரு-சிஷ்யன்’..!May 2, 2018
குஷ்புவுக்கு கோயில் கட்ட காரணமாக இருந்த “ சின்ன தம்பி” ரிலீஸ் டே!April 12, 2023
ப்ளூ சட்டை மாறனை தவிர, எல்லோருமே படம் நன்றாக இருக்கிறது என சொல்லிட்டாங்க - இயக்குநர் வெங்கட் பிரபு !December 22, 2021